பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

77


முட்டிக்குப் போனாலும் மூன்று பேர் உதவாது.

(முட்டி-பிச்சை.)

முட்டி கொள்ளப் போனாலும் மூன்று பேர் கூடாது.

(முட்டிக் கொள்ள.)

முட்டிப் பார்ப்பான் முறையீடு மொட்டைப் பசுவின் பாய்ச்சலோடு விட்டுப் போனது.

(திருவாலவாயுடையான் திருவிளையாடற் புராணம், 38.80.)

முட்டிய பிறகு குனிவதா?

முட்டி விட்டுக் குரையும் புத்தி முட்டாள் புத்தி. 18715


முட்டிற்று என்றாள் மூத்தாள்.

முட்டின கோபம் முட்டக் கெடுக்கும்.

முட்டினால்தான் குனிவார்கள்.

முட்டினால் முற்றம் கதி.

முட்டு அற்ற பெண்ணுக்கு இரட்டைப் பரியமா? 18720 }}

(நாரிக்கு பரியம்.)


முட்டுக்கு முட்டு அல்ல: மூடக் கதவும் அல்ல; சந்நிதி வாசலுக்குச் சாத்தக் கதவும் அல்ல.

முட்டுப் பட்ட பிற்பாடு குனிகிறது.

முட்டுப்பட்டு ஜயம் வருமானால் குட்டுப் பட்டால் குறைவு என்ன?

முட்டும் முன் குனிய வேண்டும்.

முட்டை இட்ட கோழிக்குத் தெரியும் பொச்சரிப்பு. 18725 }}


முட்டை இடுகிற கோழிக்கு எரிச்சலும் உண்டு.

முட்டை இடுகிற கோழிக்கு எரிவு தெரியும் அல்லது மற்றவருக்குத் தெரியாது.

முட்டை இடுகிற கோழிக்குப் பிட்டம் எரிபந்தம் உண்டு.

(எரிச்சலும்.)

முட்டை இடுகிற கோழிக்குப் பொச்சரிப்பு என்ன?

முட்டை இடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும். 18730

(வலி.)


முட்டை இடுவதன்முன் குஞ்சை எண்ணுவது எப்படி?

முட்டைக் கண்ணி பிள்ளை இரண்டு கண்ணும் தொள்ளை.

முட்டைக் குஞ்சைப் பிட்டு வளர்ப்பது.

முட்டை கொண்டு எறும்பு திட்டை ஏறினால் மழை பெய்யும்.

முட்டையிலே கூவி முளையிலே கருகுகிறது. 18735


முடக்கச் சரக்கு இருக்க விலை போம்.

(முடக்குச் சரக்கு.)