பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

தமிழ்ப் பழமொழிகள்


முடக்கடிக்காரனுக்குப் புறக்கடை தடம்.

(கொங்குநாட்டு வழக்கு.)

முடங்கப் பாய் இல்லாமல் போனாலும் சடங்குக்குக் குறைச்சம் இல்லை.

மூடப் பிள்ளை ஆனாலும் மூத்தி பிள்ளை.

(முந்தின பிள்ளை.)

முடப் புல்லும் முக்கல நீரைத் தடுக்கும். 18740

(செறுக்கும்.)


முடிவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.

முடவன் சண்டைக்குப் போனாற் போல.

முடவன் தண்ணீருக்குப் போனால் எட்டான் மெனக்கேடாம்.

(மூன்று பேர்கூடப் போகவேணும்.)

முடவனுக்குக் கொம்புத் தேன் எட்டுமா?

முடவனுக்குக் கோபம் விட்டி இடத்திலே. 18745


முடவனுக்கு நொண்டி சண்டப் பிரசண்டன்.

முடவனுக்கு விட்ட இடத்தில் கோபம் வரும்.

முடவனை மூர்க்கக் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்.

முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை வாசற்படி தட்டும்

முடிக்காதவன் படிக்காதவன். 18750


முடிச்சு அவிழ்த்துக் கொடுத்ததும் அல்லாமல் இளிச்சவாய்ப் பட்டமும் கிடைத்தது.

(முடிச்சு இழந்ததும் மன்றி.)

முடிச்சு அவிழ்க்கப் போனாலும் மூன்று பேர் கூடாது.

முடிச்சு முடிச்சாய் நட்டால் கோட்டை கோட்டையாய் விளையுமா?

(முடி முடியாய்.)

முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்பலாய்ப் போகிறதே.

முடி பொறுத்த தலைக்குச் சுழி சுத்தம் பார்க்கிறதா? 18755


முடி முடியாய் நட்டால் பிடி பிடியாய் விளையுமா?

(பொதி பொதியாய்.)

முடிய முடிய நட்டால் கோட்டை கோட்டையாய் விளையுமா?

(முடி முடியாய் நட்டால்.)

முடியும் வகை யோசியாமலே முயற்சியை மேற்கொள்ளாதே.

(முயற்சி செய்யாதே)

முடி வைத்த தலைக்கு மேலே சுழிக்குற்றம் பார்க்கிறது கொண்டு குலம் பேசுவது போல் இருக்கிறது.

முடுக்கிலிருந்து குதிக்கிறதா? 18760