பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

79


முடைப் புல் முக்குறுணித் தண்ணீர் செறுக்கும்.

முண்டக்கண்ணி பிள்ளை இரண்டு கண்ணும் நொள்ளை.

முண்டச்சி சம்பந்தக்காரன் முன்னுக்கு வருவானா?

முண்டச்சி பெரிய தனம் சுக்லாம்பரதரம்,

முண்டச்சி பெற்றது மூன்றும் அப்படியே 18735


முண்டச்சி வளர்த்த மகன் முண்டனுக்கு இரண்டு ஆவி .

(மூன்று ஆள்.)

முண்டைப் பையன் செங்காளி மூன்று வீட்டுக்குப் பங்காளி,

முனுக்கு என்றால் மூக்குக்கு மேலே கோபம்.

முணுமுணுத்த சாப்பாட்டைக் காட்டிலும் முரமுரத்த பட்டினி மேல்.

முத்தம் கொடுப்பதற்குள் முந்நூறு தடவை குணம் மாறும். 18770


முத்தால் நத்தை பெருமைப்படும்; மூடர் எத்தாலும் பெருமைப்படார்.

முத்திலும் சொத்தை உண்டு; பவளத்திலும் பழுது உண்டு.

முத்து அளக்கிறவளும் பெண் பிள்ளைதான்; மூசப் பயறு அளக்கிறவளும் பெண்

பிள்ளைதான்.
(முளைப் பயிறு.)

முத்து அளந்த கையால் மூசப் பயறு அளக்க வந்தது.

(முழுப்பயறு அளக்கக் காலம் வந்தது)

முத்து அளந்த கையால் மோர் விற்கிறதா? 18775


முத்துக்கு முத்தாய் இருக்கிறது.

முத்து குலத்தால் பெருமைப்படும்; மூடர் குலத்தால் பெருமைப்படார்.

முத்துத் தொழில் கச்சைத் தொழில், மற்றத் தொழில் பிச்சைத் தொழில்.

(கீழைக்கரைப்பக்க வழக்கு.)

முத்தும் பவளமும் முறை முறையாய்க் கோத்தது போல.

முத்து முத்தாய் இருக்கிறது. 48780


முத்தைத் தெளித்தாலும் கல்யாணந்தான்; மோரைத் தெளித்தாலும்

கல்யாணந்தான்.

முதல் இல்லாத பிள்ளை வட்டிக்குச் சீராடினான்.

முதல் இல்லாதவன் உயிர் இல்லாதவன்.

முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை.

(பழமொழி நானுாறு.)

முதல் உள்ளவனுக்கு லாபம். 18785