பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தமிழ்ப் பழமொழிகள்


முதல் எடுக்கும்போதே தப்பட்டைக்காரன் செத்தான்.

முதல் எழுத்திலே வெள்ளெழுத்தா?

முதல் கோணல் முற்றும் கோணல்.

(கோணினால்... கோனும் முட்டக் கோணல்.)

முதல் பணம் எங்கடா என்றால் என் கடா ஏரியில் மேயுது என்ற கதை.

முதல் பிள்ளை மூத்திரத்துக்கு அழும்போது இரண்டாம் பிள்ளை பாலுக்கு

அழுகிறதாம்.

18790


முதல் பிறந்த பிள்ளை உரல் குழியை நக்குகிறதாம்; திருப்பதிக்குப் போனாளாம்

திரும்ப வரம் கேட்க.

முதல் பிறந்த குழந்தை உரல் குழியை நக்குகிறதாம்; மூன்றாவது பிள்ளை

முந்தியை இழுக்கிறதாம்.
(தண்டைக்கு அழுததாம்.)

முதல் பிறந்த பிள்ளை உரல் பணையை நக்குகிறதாம்: தேவடியாளுக்குப் பிறந்த

பிள்ளை திரட்டுப் பாலுக்கு அழுததாம்.

முதல் பிறந்த பிள்ளை முத்துப் பிள்ளை; பின்னே பிறந்த பிள்ளை மாவுப்பிள்ளை.

முதல் மடைக்கு எருப் போடு; கடை மடைக்கு வரப்புப்போடு. 18795


முதலியார் வீட்டு நாய்க்கு முத்துமாலையின் பெருமை தெரியுமா?

முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு.

(டம்பம்.)

முதலில் எடுத்துச் செலவிடாதே.

முதலிலே கெட்டிக்காரன், முடிவிலே சோம்பேறி.

முதலிலேயே துர்ப்பலை; அதிலும் அவன் கர்ப்பிணி. 18800

(துர்ப்பலம்.)


முதலுக்கு மிஞ்சினால் மோசம்.

முதலுக்கு மோசமாய் இருக்கிறது: லாபத்துக்குச் சண்டை போடுகிறதா?

முதலே துர்ப்பலை; அதிலும் கர்ப்பிணி.

முதலைக்கு இல்லை நீச்சும் நிலையும்.

முதலை தன் இடத்தில் மலை ஒத்த யானையையும் இழுத்துச் செல்லும். 18805

நாயின் காலை விட்டுப் புஸ்க மரத்தின் வேரைப் பிடித்தது போல.