பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

தமிழ்ப் பழமொழிகள்


முப்பதில் மூர்க்கம்: நாற்பதில் நாகரிகம்.

முப்பதில் வாழாதவன் மூடன்; முன்னும் பின்னும் தெரியாதவன்

குருடன்.
(வாழாதவன் முரடன்.)

முப்பது செருப்புத் தின்றவனுக்கு மூன்று செருப்புப் பணியாரம்.

முப்பது நாளும் போகம், பொற்பணமே வா.

முப்பது நாளே போ; பூவராகனே வா. 18835


முப்பது பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகாது.

முப்பதும்போய். மூன்றும் தள்ளினவன் போல் பேசுகிறான்.

முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை; முப்பது வருஷம் தாழ்ந்தவனும் :இல்லை.

(கெட்டவனும் இல்லை.)

முப்பேன் பிடிப்பது மூதேவி வாசத்துக்கு அடையாளம்.

முப்பொருள் ஆதிமூலம் ஆனவன். 18840


முயல் எத்தூரம் போனாலும் கைத் தூக்கு.

முயல்குட்டி சிங்கத்தை அடித்த கதை,

முயல் கொம்பு.

முயல் கோடு; ஆகாயப் பூ.

முயல் பிடிக்கிற நாய் மூஞ்சியைப் பார்த்தால் தெரியாதா? 18845


முயல் விட்டுக் காக்கைப்பின் போனவாறு

(திருநாவுக்கரசு நாயானார் தேவாரம்.)

முயல் வேட்டைக்கும் பிள்ளையார் கோயில் ஆண்டிக்கும் ஒத்து வராது.

முயலுக்குக் கொம்பு இல்லை என்றாற்போல.

முயலுக்குக் கொம்பு கண்டவர் இல்லை என்றாற் போல.

முயலை எழுப்பிவிட்டு நாய் பதுங்கினது போல. 18850

(தூங்கியது போல. பதுங்கி விட்டது.)

முயலை எழுப்பிவிட்டு நாயைத் தேடுவதா?

முயலைக் கிளப்பிவிட்டு நாய் படுத்துக் கொண்டாற்போல.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

முயற்சி திருவினை ஆக்கும்.

(குறள்.)

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. 18855


முரட்டுத் தனத்துக்கு முதல்தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

முரட்டுத் தனத்துக்கு முதல் பாதம்.