பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

91


மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.

மூத்தே சொல்லும் முழு நெல்லிக்காயும் முன் கசக்கும்; பின்தித்திக்கும்.

(முது நெல்லிக்காயும். முன் கசக்கும்; பின் இனிக்கும்.)

மூத்தோர் வார்தையைத் தடுக்கிறதா? 19055

(தட்டுகிறதா?)


மூதேவிக்கு முகூர்த்தம் வைத்தால் முப்பது நாழிகையும் ராகு காலம்

மூதேவி. மூதேவி. முகம் கழுவா மூதேவி.

மூதேவி வாழும் இடத்தில் சீதேவி வாழ்வாளா?

மூப்பிலும் தருமம் செய்ய முயற்சி செய்,

மூப்பு ஏன் பிடிப்பது? மூதேவி வாசத்துக்கு அடையாளம். 19060


மூப்புக்குச் சோறும் முறத்துக்குச் சாணியும்.

மூர்க்கம் உள்ள ராஜாவும் மூட மந்திரியும் அழிவா்கள்

மூர்க்கரை மூர்க்கரி முகப்பர்

(உகப்பர் )

மூர்க்கரோடு இணங்கினால் ஏற்க வேணும் அபகீர்த்தி,

மூரிக்கன் முகத்தில் மூதேவி குடி இருப்பாள். 19065


மூர்க்கனுக்கு முதல்.

மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா.

மூர்க்கலும் முதலையும் சரி.

மூர்க்கனைச் சேர்ந்தவன் வாழான்; மூடனைச் சேர்ந்தவன் படியான்.

மூர்த்தி சிறிது: கீர்த்தி பெரிது. 19070


மூலக் காற்றப் புழு விழும்.

மூலத்துப் பெண் மாமியார் மூலையிலே.

(மூக்கிலே.)

மூலவருக்கே மொந்தைத் தண்ணிர் இல்லை என்றால் ஆலயம்

எல்லாம் அபிஷேகமாம்.

மூலிகை அறத்தால் மூன்று வருஷம் ஆளலாம்,

(அறிந்தால். )

மூலையில் இருப்பவரை முற்றத்தில் வைத்தது போல. 19075


மூலையில் திட்டுகிறவனை முற்றத்தில் இழுத்த கதை.

மூலையிலே சுந்தரம், ஒதுகிறானடி மந்திரம்.

மூலை வீட்டிலே முட்டை இடுகிறான்.