பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

தமிழ்ப் பழமொழிகள்


மூலைந்து கூடினால் மூளியும் பெண் ஆவான்.

மளிச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வேக வேண்டும். 19080

(வேகிறது ஒன்று.)


மூளி நாய்க்குப் பட்டது மிச்சம்

மூன்றாம் ஈற்று மாட்டுக்கு முதுகு எல்லாம் பால்.

மூன்றாம் கட்டு அவிழ்த்தால் தெரியும்.

மூன்றாம் பேஸ்து வைத்தவன் மூஞ்சி மாதிரி.

மூன்றாம் மாதத்தில் முறிகிழங்கு ஆகும்; நாலாவது மாதத்தில்

நார்க் கிழங்கு ஆகும். 19085


மூன்றாம் மாதம் முறியல் கிழங்கு.

(பனை )

மூன்றாம் வயசில் மூலையில இருக்கிற வார்த்தை எல்லாம் வரும்.

மூன்றாவது மாதத்தில் முறிகிழங்கு ஆகும்; நாலாவது மாதத்தில் நார்க் கிழங்கு ஆகும்.

(பனை,)

மூன்றாவது முதுகு எல்லாம் பால்.

மூன்று அடி அடித்து முள் உடைந்தது போல 19090


மூன்று அடியும் அடித்துப் போர் மேலேயும் போட்டாச்சுது.

மூன்று ஐம்பது வாழ்வானா?

மூன்றுக்கு ஒன்று முதலுக்கு நாலும்,

(முதலுக்கு மூன்று.)

மூன்று காசுக் குதிரை. ஆறுகாசு வைக்கோல் தின்கிறதாம்.

மூன்றுகுசினிக்காரர்கூடிச் சூப்பைக் கெடுத்தாற் போல. 19095

(குசினிக்காரன்-சமையற்காரன்.)


மூன்று தலைமுறையும் முட்டாள்.

மூன்று பல்லும் போனவருக்கு முறுக்குக் கடையில் என்ன வேலை?

மூன்று பிடித்து எண்ணும் பேர் வழி.

(மூணு.)

மூன்று பேர் சேர்ந்தால் மோசம்; நாலு பேர் சேர்ந்தால் நாசம்.

மூன்று பேர் வழிக்குத் துணை; இரண்டு பேர் பிணையல் மாடு; ஒருவன் போனால் பரதேசி. 19100


மூன்று பொருளையும் தேடு; முதிர் வயதில் ஊன்று கோல் ஆகும்.

மூன்று மாசத்துக்கு ஒரு மாரி பெய்தால் ஒருபோகம் விளையும்.

மூன்று மாசத்துக்கு முன்னே பல் போனவனுக்கு முறுக்குக் கடையில் என்ன வேலை?