பக்கம்:தமிழ்மாலை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

“நல்லோர் துன்புற்று இன்புறுவர் துன்பம் இழைப்போர் துன்புறுவர்; உயிர்ப்பலி அதிலும் மாந்தப்பலி கூடாது; காதலர் கூடுவர்; காதல் பூண்டோர் கடவுள் நிலையையும் பெறுவர்,நல்லாட்சிகண்டோர் வேற்றுகட்சியை விரும்பார்” என்னும் கருத்துகளின் பொதிவு இப்புதினம். இடையிடையே தம் கோட்பாடுகளாகிய சிவம், சித்தாந்தம்,தமிழர் பண்பாடு.தனித்தழிழ் வளர்த்தல் முதலியவற்றையும் விவரமாக வைத்துள்ளார். இதனைத் தமிழ் மரபில் கொண்டுசெல்வதை நூலின் பெயரே அறிவிக்கிறது.இதனை ஒர் அறநெறிப் புதினம் எனலாம். - -

மற்றொன்று கோகிலாம்பாள் கடிதங்கள்.இஃது அடிகளாரின் உரிமை வடிப்பு. சீர்திருத்தக் கருத்துக்களின் பெட்டகக் கதை இது. சிறுவர் மணக் கொடுமை, கைம்பெண் மணம், கைம்பெண் காதலுணர்வு கலப்புத்திருமணம் இவற்றின் தொடர் ஒட்டமே இப்புதினம். - -

இக்கதை உத்திகடிதமுறை உத்தி கடிதமுறைப்புதினமும் மேல்நாட்டுப் பிறப்பே. ஆங்கில அறிஞர் சாமுவேல் ரிச்சர்ட்சன் என்பார் 1740ல் இவ்வகைப் புதினத்தைப் படைத்தார். பாமெலா என்னும் புதினத்தை 135 கடிதங்களிலும் விளாரிசா என்னும் புதினத்தை537 கடிதங்களிலும் படைத்தார்.பின்னது 3000 பக்கங்கள் கொண்டநீள்புதினம்.

இந்த உத்தியில் மனம்பற்றினார் அடிகளார். புதினத்தைப் படைத்தார். இப்புதினங்களில் அடிகளாரின் குமுகாயச் சீர்திருத்த ஊற்றம் ஒலிக்கிறது. பெண்கள் முன்னேற்ற மணம் தென்றலாக வீசுகிறது. சீர்திருத்தப் பெட்டகம்

கோகிலாம்பாள் ஏழு ஆண்டுநிறையாச்சிறுமி.இவளுக்கு45ஆண்டு நிறைந்த ஒருவன் மணம் முடித்து வைக்கப்பெறுகிறான். அவன் ஒராண்டில் வாயைப் பிளந்து விடுகின்றான். எட்டாண்டுநிறையாத கைம்பெண் கோகிலா. பொட்டிழந்த பொற்சிலை. தன் மாமனார் வீட்டில் அதிலும் தன் உண்மைப் பெற்றோரை உணராதபுதிர்நிலையில் அதிலும் ஒருபாரசீக இனத்துமாமனார் இல்லத்தில் அடைபடுகின்றாள். இங்கு ஒர் ஒப்பீடு நயமானது வியப்பையும் சொல்லுகிறது. பாவேந்தர் பாரதிதாசனார் பாடல் பின்வருவது: "ஏழு வயதே எழிற்கருங் கண்மலர்; ஒரு தா மரைமுகம்; ஒரு சிறு மணியிடை: சுவைத்தறி யாத சுவைதரும் கனிவாய், இவற்றையுடைய இளம்பெண்; அவள்தான் கூவத் தெரியாக் குயிலின் குஞ்சு, தாவாச் சிறுமான்,மோவா அரும்பு; தாலி யறுத்துத் தந்தை வீட்டில் இந்தச் சிறுபெண் இருக்கின்றாள்

    • {}
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/100&oldid=687168" இலிருந்து மீள்விக்கப்பட்டது