பக்கம்:தமிழ்மாலை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

ஆட்சிமொழி, மக்களின் பொதுமொழி என்னும் பங்கு அரசியல்பங்கு இவற்றால் மேற்கண்ட இருநூல்களையும் அரசியல்நூல்கள் எனலாம்.இவ்வாறு கூறுவது கொண்டு அடிகளார் இந்திய அரசியலில் கொண்டிருந்த கருத்தைக் காணவும் நேர்கின்றது.

பேரியக்கச் சார்பு

இந்திய தேசிய காங்கிரசின் வந்தேமாதரம் பாடல் ஒலித்த போது அடிகளாரும் கொற்றவையை நாட்டுத் தாய் வடிவில் கண்டு வந்தேமாதரம் என்னும் தலைப்பில் ஒருபாடல்எழுதினார். தமிழிந்தியமாது'என்னும் பாடல்கள் இந்திய நாட்டின் சிறப்பையும் அதன் கலைகள் மேற்கத்தியரால் கவரப்பட்டதன் கவல்வையையும் அறிவிப்பதால் இந்திய அரசியல் தென்படுவதைக் காணலாம். காங்கிரகத்தலைவர் சுரேந்திரநாத் பானர்ஜியைப் பாராட்டிஒரு பாடல் எழுதித் தாமே தன் செலவில் அச்சிட்டு வழங்கியமையும், ஒத்துழையாமை இயக்கத்தைப் பாராட்டி வாழ்த்தியமையும், பாலகங்காதர திலகரை அந்தமானுக்கு அனுப்பியதைக் கண்டித்தமையும் அடிகளார் தம்நாட்குறிப்பில் எழுதியிருப்பது அவர்தம் உணர்வில் ஊறிய அரசியல் ஆர்வத்தைக் காட்டுவனவாகும். அண்ணல் காந்தியடிகளை முனிவர் என்றார்.அவர் தன்மாகாணத்தில் நிறுவிய இந்து பல்கலைக்கழகத்தை வாழ்த்தினார்.

சென்னைக் கூடடமொன்றில் அடிகளார் சொற்பொழிவாற்றியபோது இடையில் ஒருவர் திராவிட நாடு திராவிடர்க்கே” என்பது பற்றிய தங்கள் சருத்தென்ன? என்று வினாவிடுத்தபோது இந்தியா முழுவதுமே திராவிட நாடுதான் என்றுவிடைதந்தார்.இவ்விடை தமிழ் அதாவது திராவிடநாகரிகம் ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரவிநிலைத்தமையைக் குறிக்குமாயினும், நாட்டுப்பிரிவினையை விரும்பாமல் இந்திய ஒருமைப்பாட்டைச் சுட்டுவதாகவும் உள்ளது.

அனைத்திலும் சிறப்பான இந்தி மொழி என்பதைப் பல்வகையிலும் மறுத்து, தமிழ்தான் இந்திய ஆட்சி மொழியாகவும், பொதுமொழியாகவும் ஆதற்குரியது; ஆங்கிலமும் தொடர்தற்குரியது என்றமை தமிழர் அரசியலில் நிமிர்வதையும், ஒருமைப்பாட்டெண்ணம் மொழியால் துவண்டமையும் அரசியல் வித்தகத்தின் பங்களிப்புகளே.

1938 இந்தி எதிர்ப்பில் தலைதுாக்கி அடிகளார் நின்றதும். மீண்டும் 1948-இல் இந்தி எதிர்ப்பில் பெரும் பங்கேற்றதும் அரசியல் நேரடி வெளிப்பாடாகும்.

இந்தி பொதுமொழியா? என்னும் வினா உத்திநூலும் அதன் ஆங்கில வடிப்பும் அடிகளாரின் நூல் வடிப்புகளின் அரசியலைச் சேர்க்கவும் அடிகார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/105&oldid=687173" இலிருந்து மீள்விக்கப்பட்டது