பக்கம்:தமிழ்மாலை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

ஆசிரியராகியநாயகர் அவர்களது.திருவுருவப்படத்தை வணங்குவார் எனறால நாயகர் மேல் கொண்டிருந்த உயிரார்ந்த ஈடுபாடு அளவிடற்கரியது எனலாம். தம் நூல்களிற் சிறந்த ஆய்வுநூலாகிய மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்னும் பெருநூலைநாயகர் அவர்கட்கே படைத்துள்ளார்.

சிறப்பாகக் குறித்தால் அடிகளார் படைத்த வரலாற்று நூல்கள் இரண்டும் அதன் துணை நூலும் அடிகளார்தம் வாழ்க்கை வரலாற்றுடன் ஒன்றியவை எனலாம்.

15. பொதுவியல் (6 நூல்கள்)

இதுவரை கண்ட14இயல்களின் கருத்துக்களின் விரவலாகவும் மேலும் பொதுவகைக் கருத்துக்களையும் கொண்டவையாக வெளிவந்துள்ள நூல்களைப் பொதுவியலில் அடக்கிக் காண்பது பொருந்துவதாகும்.

அடிகளார் இளமையிலேயே ஆங்கில அறிஞர் அடிசன்பால் ஆர்வமும் பற்றும் கொண்டவர். அவர்தம் கட்டுரைகளைத் தமிழாக்கி வெளியிட்டதைத் தொகுத்துச் சிந்தனைக் கட்டுரைகள் என்றுநூலாக்கினார். ஆங்கில மொழி பெயர்ப்பென்று கூறமுடியாது தழுவலாகும். கருத்துக்கள் அடிசனுடையவை; சொல்லோட்டம் அடிகளாருடையவை. மற்றும் தாமே அதனுள் புகுந்து கொள்கிறார். The Vision of Mirra என்னும் கட்டுரை முருகவேள் கண்ட காட்சி என்று தம்புனைபெயர் இணைப்பில் வந்தது. The wonder of Creation என்பது படைப்பின் வியத்தகு தோற்றங்கள் என்று தமிழ்நாட்டுக் காட்சிகள் இடம்பெற்றன. திருவனந்தை மலை, அழகர்மலைப் பகுதிக் காட்சிகள் மிளிர்கின்றன. ஆங்கநாடு தமிழ் நாடாகியுள்ளது. பெயர்கள் தமிழ் உருவில் ஏறத்தாழ அன்பொலிப்பில் அமைந்தன. Raphael இரவேல் ஆனான்; 'Glapiyea’கிளிமொழியானாள். சிந்தனை அடிசன், கட்டுரைகள் அடிகள். இதனை இலங்கைப் பல்கலைக்கழகம் கல்லூரி இடைநிலைக் கலைமானவர்க்குப்பாடமாக வைத்தது.

மற்றொரு கட்டுரைத் தொகுப்பு அறிவுரைக் கோவை. தமிழ் தமிழன், தமிழ் மரபு பிற வேற்று மரபுகளில் வீண்தாக்கம் என்றெல்லாம் சுவையுடனும் உணர்வுடனும் அமைந்த கட்டுரைகள் கொண்டது.இது சென்னைப்பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டு பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது.இதழ்களில், மேடைகளில் இதனால் சலசலப்புகள் கண்டனங்கள் நேர்ந்து பின்னும் பாடமாக்கப்பட்டது. பின்னர் அறவே நீக்கப்பட்டது.

பலவகைக் கட்டுரைகள் சமயம், சித்தாந்தம் இயற்கை முதலியவற்றைக் கொண்ட கட்டுரைத் தொகுப்பொன்று முன்பணிக்காலம் என்று வெளிவந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/109&oldid=687177" இலிருந்து மீள்விக்கப்பட்டது