பக்கம்:தமிழ்மாலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்வாழ்வின் ஒலிபரப்பு

முன்னே ஒன்றை மொழியவேண்டும். அஃதும் வேண்டப்படுகின்றது. அடிகளாரைக் கவிஞர்களும் பேராசிரியர்களும் மட்டுமோ பாராட்டினர்? பாராட்டி, புகழ்ந்து, வழிபற்றி, வழிபட்டோர் பட்டியல் மிகப் பெரிது. எண்ணிக்கைப் பெருமை மட்டுமன்றி அப்பட்டியலில் உள்ளடங்குவோர் பல துறையினருமாவர். அன்னோர் கருத்துக்களை வேற்றுமுனையிலும் மாற்று முகப்பிலும் வைத்துக் காண்பது அடிகளாரின் அறிவு வாழ்வின் ஒலிபரப்பாகும். -

  • &

பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், "அடிகளார் என் வலக்கை போன்றவர்'என்றார். இவர் பகுத்தறிவுத் தந்தை மன்பதைத் தலைவர்.

தவத்திரு சங்கராச்சாரியார், "அவர் எழுதிய சாகுந்தலம் அவருடைய இருமொழிப்புலமைக்கும் சான்று”என்று, அது கருதிய பரிசுக்கு அறக்கட்டளை நிறுவினார்.இவர் உலக குரு எனப்படுகின்றார்.

அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், "அடிகளார் வழங்கும் கருத்துக்களைப் பதப்படுத்திப்பக்குவப்படுத்தித்தந்திருக்கிறார்”என்றார்.இவர் அரசியல் அறிஞர்; மேடையரசர். -

வேதாசலனார் சொற்பொழிவின்பத்தில் மூழ்கிவிட்டேன்" என்றார் தமிழ்த் தாத்தா எனப் பெறும் உ.வே.சா. அவர்கள். இவர் பதிப்பரசர்.

தமிழ்க்காக கா. சுப்பிரமணியனார், “தமிழ் நாகரீகத்திற்குப் புத்துயிர் ஊட்டுபவர்” என்றார்.இவர் சட்ட வல்லுநர்.

"தமிழ் நூல்களில் குப்பைக்கூளங்களை-இடைச்செருகல்களை அடிகளார்கண்டிப்பாகத்தள்ளிவிடுவார்”என்றார்கல்கியார்.இவர் எழுத்துலக முன்னோடி

கோவை. கோ. து. நாயுடு அவர்கள், "அடிகள் கருத்துக்கள் விலைமதிப்பற்றவை” என்றார். இவர் அறிவியல் அறிஞர் தொழில்வல்லுநர்.

"நக்கீரரும் சிவஞான முனிவரும் ஒருருக் கொண்டாலனையவர்" என்றார் திரு.வி.க அவர்கள்.இவர் தமிழ்த் தென்றல் தொழிலாளர் தலைவர்.

முனைவர் மில்லர், "இந்தச் சிறந்த பேராசிரியரைப் பயன்படுத்த வேண்டும்” என்று கல்லூரிப்பணியை ஏற்கவற்புறுத்தினார்.இவர் ஐரோப்பிய அறிஞர் கல்வி வல்லுநர்.

'அடிகளார் மும்மொழிச் செம்மல்" என்றார் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர். இவர் மொழியியல் வல்லுநர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/11&oldid=687071" இலிருந்து மீள்விக்கப்பட்டது