பக்கம்:தமிழ்மாலை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

அடிகளார்தம் நூல்களின் பதிப்புகள் அக்காலக் கணிப்புடன் காணத்தக்கவை. அச்சுக்கலை தோன்றித் தமிழகத்தின் வளரத் தொடங்கிய காலம் அது. நூலாக்கமும் பையப் பைய நடக்கத் தொடங்கி மிகுநடைக்குக் கடைகால் ஊன்றிய காலம்.நூல்களுக்கு குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி, யோகநித்திரை அல்லது அறிதுயில்', 'மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி’ என்றெல்லாம் இரட்டைப் பெயரிட்டார். நூலின் தலைப்புகளே உட்பொருள்களைத் தெரிவிக்கும் குறிகளாக அமைந்தன. தம் நூல்களில் சிலவற்றைத் தம் உள்ளத்தில் ஒளிர்ந்த ஆசிரியர்க்கெல்லாம் படைப்பாக்கியுள்ளார். இயற்றமிழாசிரியர் நாகை.வே.நாராயணசாமிபிள்ளை, சித்தாந்த ஆசிரியர் சோமசுந்தர நாயகர், வேதாகம ஆசிரியர் நாகை வீரப்ப செட்டியார் ஆகிய ஆசிரியர்க்கெல்லாம் படைப்பு காட்டியுள்ளார். அதனையும் படைப்பு என்று எழுதாமல் மன ஒன்றிப்பை வெளிப்படுத்தும் உணர்வு வடிப்புகளாகத் தந்தார். ஒன்று சான்றுக்கு:

"கைம்மாறு சிறிதுங் கருதாது பேரருட்பெருக்கத்தால் எனக்குத் தமிழ் செவியறிவுறுத்திய என் இயற்றமிழாசிரியர் திருவாளர் வே. நாராயணசாமி பிள்ளையவர்களை நினைந்துருகுதற் பொருட்டாக இந்நூல் என்னால் வகுக்கப்பெற்றது”

என்றுதம் பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை நூலைப் படைத்தார்.

அடிகளாரின் நூல்கள் பல நீண்ட முகவுரைகளைக் கொண்டவை. ஆங்கில நாடகப் பேராசிரியர் பெர்னார்டுசாவைப் போல நீண்ட பெரும் முகவுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார்.இலக்கியநயம்செறிந்த அடிகளார்தம் ஆங்கில நடைநீண்ட தொடர்களாலானது.75 சொற்களுக்கு மேலும் கொண்ட தொடர்களைக் காணலாம்.

அடிகளார் காலம் தமிழ் நூல்களுக்கு நல்ல விற்பனைக்களம் இல்லாத காலம், ஒரிருநூல்களே1000 படிகள் பதிப்பாயின. பலநூல்கள் பல பதிப்புகளைப் பெற்றாலும் மறுபதிப்புக்கள் 200-320 படிகள் எனவும் அமைந்தன. பத்து ஆண்டுகள் முதல் 17 ஆண்டுகள் வரை அவர்தம் நூல்கள் விற்பனை வரலாற்றில் முதுமையடைந்தன.

"ஒரு சிறந்த நூல் என்பது ஒரு சிறந்த அறிஞனின் அழியா வாழ்க்கைச் சாரம்” என்றார் கவிஞர் மில்தன்.இது அடிகளார் நூல்களுக்கு மிகுதியும் பொருந்தும். நீண்ட முகவுரை போன்றே மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்னும் ஆய்வுநூலில் 60 பக்கங்களுக்கு மேற்பட்ட பொருளடக்கம் விரித்துக் காட்டியுள்ளார். அதனைப் படித்தாலே நூலின் நுணுக்கங்களையும் அறியலாம். நூலின் ಆ6ು க அதாவது கடைகாப்பாகச் சில நூல்களில் தம் பெயரும் நூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/113&oldid=687181" இலிருந்து மீள்விக்கப்பட்டது