பக்கம்:தமிழ்மாலை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

முடிந்த காலமும் காட்டியுளளார். மேற்கண்ட வரலாற்று நூலின் இறுதியில், “பல்லாவரம் பொதுநிலைக்கழக ஆசிரியர் நாகைக்கிழார் மறைமலையடிகள் ஆராய்ந்து எழுதிய மாணிக்கவாசகர்காலமும் வரலாறும் என்னும் நூல் என்று காட்டியுள்ளார்.நாகை வாழ்வை விடுத்துப்பல்லாவரம்வாழ்வில் நெட்டாண்டுகள் வாழும்போதும்"நாகைக் கிழார்' என்று குறித்தமை அவர்தம்நாகைப்பற்றை மட்டுமன்றி, நாகையில் எழுதத் துவங்கிய இந்நூல் பல்லாவரத்தில் நிறைவேறியதையும் காட்டுவதாகும். அதுமட்டுமன்றி நாகையில் ஒரு மலை என்னும் இச்சொற்பொழிவுத் தலைப்பொன்றுக்கும் சான்றாகிறது.

அச்சு வரலாறு

அடிகளார்தம் நூலச்சேற்றத்தில் அடிகளாரின் பங்களிப்பும் உண்டு.

“தம்மால் முடிவதனைத் தாமாற்சி செய்தல்லாற் பின்னை ஒருவரால் செய்வித்தும் என்றிருத்தல் செல்வீர் அருவி மலைநாட, பாய்யவோ வெந்நீரும் ஆடாதார் தீ' "

எனும் பழமொழிப்பாடல் அறிவிப்பது போன்று அடிகளார்தம்மால் முடிவதனை ஆராய்ந்து தாமே செய்தார். தம் இல்லத்தில் தமக்குவேண்டிய திருமுருகன் அச்சகத்தைநிறுவினார்.நூல்களை எழுதிய அவர் தாமே அச்சுக்கோர்க்கும் பணியிலும் பங்குகொண்டார். மெய்ப்புத் திருத்தினார்; அச்சில் மெய்ப்புத்திருத்தம் செய்தார்; அச்சுப்பொறியில் பல நேரங்களில் அச்சேற்றினார்; நூல்கட்டு செய்தார். வெளியூருக்கு நூல் அனுப்பக் கட்டுக் கட்டினார். இவ்வாறு பதிப்பில் தம்மால் முடிவதனைத் தாமாற்றினார். பதிப்பு வரலாற்றில் அடிகளார் பங்கு ஒர் உழைப்புமுத்திரை.

உலகம் உள்ளளவும்

அடிகளார் சில மணித்துளிகள் பேசப் பல ஆய்வுகளைச் செய்தார்.ஒரு

தொடர் எழுதப் பல நூலறிவைப் பயன்படுத்தினார். எனவே அவர்தம் ஒரு நூலைப்படிப்பது பலநூல்களை அறிவதாகும் அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்,

"தமிழர்கள் கொள்ள வேண்டியன இரண்டு உண்டு.

ஒன்று படித்த சிலவற்றை மறக்க வேண்டும்;

படிக்க மறந்துவிட்ட பலவற்றைப் படிக்க வேண்டும்’ என்று பொதுவாகத் தம் திராவிட நாடு இதழில் எழுதினார்கள். அடிகளார் நூல்களில் மறக்கவேண்டியவை இல்லை. தமிழர் படிக்க மறந்துவிட்ட நூல்கள் பலவும் அடிகளார் நூல்களில் உள்ளன. அறிஞர் பெருந்தகை சொற்படி படிக்க வேண்டும். படித்தால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/114&oldid=687182" இலிருந்து மீள்விக்கப்பட்டது