பக்கம்:தமிழ்மாலை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

பரிதிமாற்கலைஞர் நேர்முகத்தால் தேர்ந்தெடுக்க தாம்பரம் கிறித்துவக் கல்லூரிப்பேராசிரியர் ஆனார். சென்னை வாழ்வுநிலைத்தது.தமிழ்நாடெங்கும் தமிழ்ச் சைவச் சொற்பொழிவு முழங்கியது. பல்லாவரத்தில் இல்லம் அமைந்தது. சென்னையில் அமைந்தாலும் நாகை நினைவு படிந்திருந்ததால் அடுத்த மகளுக்கு நாகை அம்மை பெயராகிய நீலாம்பிகை பெயரிட்டார். 'நாலுபேர் போன பாதையில் நடந்த திருவேதாசலனார் அந்நால்வர்இல்லத்தில் தவழத் தவழ முறையே நான்கு ஆண்மக்கட்கும் திருஞானசம்பந்தம், திருநாவுக்கரசு,மாணிக்கவாசகம், சுந்தரமூர்த்தி எனப் பெயரிட்டழைத்து மகிழ்ந்தார். r*

தம்மிடம் தமிழ் பயின்ற மாணவியைப் பின்னர் வரைந்த பெருமனைக் கிழத்தியாக மணந்தார். அப்பருவம் “அமராவதி அம்பிகாபதி” என்னும் நாடகம் எழுதிக் கொண்டிருந்த காலம். இக்காதல் கருவூலக் காப்பியத்தால் மேலே மணந்தது காதல் மணமா, இக்காதல் மணத்தால் 'அமராவதி அம்பிகாபதி நாடகமா? என்று ஆராய்வதைவிட அம்பிகாபதி அமராவதி போன்று அவலமின்றி மறு அம்பிகாபதியையே செல்ல மகனாகப் பெற்றார் திரு. வேதாசலனார். ஆம், பின்னர் வரைந்த பெருமனைக்கிழத்தி தந்த செல்வத்திற்கு அம்பிகாபதி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். இப்பெயர்ப்பொருத்தத்தைக் கருதிப் பார்க்கும்போது கவிஞர் பெருமகன் மில்தன்,

“ஒரு சிறந்த நூல் என்பது ஒரு சிறந்த அறிஞனின் அரிய வாழ்க்கைச் சாரமேயாகும்”

என்று எழுதிய வரிகளின் கருத்து பொருந்துகின்றதாகக் கொள்ளலாம்.

இவ்வாறாக மக்களொடுதுவன்றி மனையறங் காத்தவர்; கட்டிளமைக் கல்வியில் தொல்காப்பியத்தை ஊன்றிப் பயின்றவர்.இவ்வாறாக வாழ்க்கைப் பருவத்தின் நிறைவை நோக்கி ஏறும் முதற்படியில் காலை வைத்த வேதாசலனார்,

“காமஞ் சான்றார்"அதன் "கடைக்கோள் காலமும் கண்டார்: "ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றினார்; 'அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்”

என்னும் அடியில் ஒரு திருத்தமாக, “கிழவனும் கிழத்திகளுமாக அமைந்தார். இனிச் “சிறந்தது பயிற்றும்” ஒழுங்கில் அமர மனம்பற்றினார் போலும். அதனால் முன்னே சுவாமி என்னும் அடைமொழி சேர்த்தார். இது இல்லறம் துறவாத துறவு, சுவாமிவேதாசலம் ஆனார்.இப்போது சுவாமிவேதாசலனார்க்கு அகவை முப்பத்தைந்து. ஏறத்தாழ இளமைத்துறவு துறவு மேற்கொண்ட நாள் 27.8.1911.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/15&oldid=687075" இலிருந்து மீள்விக்கப்பட்டது