பக்கம்:தமிழ்மாலை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

இதற்கு மூன்று திங்களுக்கு முன்னர் பல்லாவர வாழ்க்கை அமைத்தவர் அதனை மாளிகையாக்கி அதனையே கோவிலாகவும் கொண்டு அம்பலவாணர்க்கு இருப்பிடமாக்கி தமிழில் வழிபாடு இயற்றினார். பல்லாவரம் வாழ்க்கை தொடங்கி ஏறத்தாழப் பத்தாண்டுகள் தமிழகத்தில் மட்டுமன்றி வடபுலம், இலங்கை ஆகியவற்றில் தேர்ந்த தமிழ்ச் சைவச் சொற்பொழிவு வாழ்வும் நூல் படைப்பு-பதிப்புப் பணியும் வளர்ந்தன. தமிழகமும் தமிழும் மேன்மேல் அணிகலன்கள் பெற்ற பருவம் இது எனலாம்.

புகழ்பட வாழ்தல் என்னும் நற்றொடருக்கு இலக்கியமாகத் திகழ்ந்த சுவாமி வேதாசலனார் 1916-இல் தம் தனிப்புகழுக்கு வித்தாகும் தனித்தமிழ் உணர்வை இயக்கமாக்கத் தொடங்கினார். தம் அன்பு மகளார் நீலாம்பிகை அம்மையாரின் தனித்தமிழ் உந்துதலால் முனைப்புகொண்ட சுவாமி வேதாசலனார் தம் பெயரை மறைமலை என்று மாற்றிக் கொண்டார். சுவாமி என்னும் அடைமொழியையும் அடிகள் என்று தமிழாக்கிப் பெயரின் பின்னே அமைத்து மறைமலையடிகள் என்று மாற்றிக்கொண்டார். முடங்கல், ஆவணம் முதலியவற்றில் இடும் கைச்சான்றை மறைமலையடிகள் என்று பதித்தார். ஆங்கிலத்தில் இடும் கைச்சான்றிலும் மறைமலையடிகள் என்றே பதித்தார்.

இளவரசனைவிட ...

தம் வாழ்வில் நூலறிவை உயிர்த்துணையாகக் கொண்ட மறைமலையடிகளார் சிறந்தநூல்களை விலைகொடுத்துப் பெற்றேமனிமொழி நூலகத்தைக் கண்டார். தம் நூல் தாமே நேர்நின்று பதிப்பித்தற்கு உதவியாகத் தம் மாளிகையிலேயே ஒர் அச்சகம் கண்டார். நிறைவாழ்வில் புகழ்த்தூண் நாட்டிய அடிகளார் தம் விருப்ப ஆவணத்தில் மணிமொழி நூலகத்தைப் பொதுவாக்கி எழுதியமை அவரது ஒப்புரவாற்றும்பண்பின்அடையாளமாயிற்று. புகழ் வாழ்வில்-திகழ் வளத்தில் அகழ் ஆய்வில் நிகழ் செயலிலெல்லாம் நிறைவே கண்டின்புற்றதம்பூரிப்பை,

"இளவரசனைவிட வாழ்க்கையை இனிதாக நடத்துகின்றேன்;

எங்கும் எனக்கு மிகச்சிறந்த வரவேற்பும் ஒப்புரவும் ஆற்றப்படுகின்றன” - என்று தம் நாட்குறிப்பில் 8.5.1912 ஏட்டில் பதிந்து ஒரு முத்திரையாக்கினார். இப்போது அகவை36, அரசனைவிட என்று குறிக்காமல் இளவரசனைவிட என்றதன் பொருளில் பூரிப்புக்குறிப்புமட்டுமன்று.இளமையுணர்வின் மிடுக்கும் ஒலிக்கிறது.

அடிகளாரின் இளமை உணர்வுமட்டுமன்று அவர் தம் தோற்றமும் பொருந்தும். அவர்தம், உடல் பொன்நிறம் முகம் வட்டநிலா, பின்னுள்ள வாழைப்பூக் குடுமி பழம் மரபின் சின்னம் அடுத்து அழகுறுத்திய தோளைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/16&oldid=687076" இலிருந்து மீள்விக்கப்பட்டது