பக்கம்:தமிழ்மாலை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 ()

தட்டும் குடுமி ஒர் அழகுப் பாகை உடலின் முழுத் தோற்றம் ஒர் அமைப்புக் கவர்ச்சி, முழுமதிக்கும் முகில் சூழ்ந்த முக்காடு உண்டன்றோ: அதற்கு ஈடுகொடுத்தது அவரிட்டுக்கொண்ட முக்காடு; காவிப்போர்வை துறவுக்கோலத்தை நினைவுறுத்தி நெற்றி நீறால் சைவத்திருவைக் காட்டியது. இத்துறவு இளவரசர்க்கு எழுதுகோல் செங்கோல், அஃதே தமிழ்ப்பகையைச் சாடும்போது வாள்; தமிழ் மூளையே அரச முடி நூலறிவே அரிமானேந்திய அமளி குரல்குயிலொடு கும்மளிக்கும் குழல் ஒலி:தனித்தமிழ்தான்குடிபுரக்கும் ஆவண முழக்கம். அவர்தம் தமிழாட்சி இந்திய நாட்டெல்லை நிறையப் பரவி இலங்கையையும் கொண்டது.

இவ்வாறு செல்வப் புகழில் பிறந்து, கல்விப் புகழில் தவழ்ந்து,இல்லறப் புகழில் நடைபழகி, சைவப்புகழில் கைவீசி, சொற்பொழிவுப் புகழில் விரைந்து, எழுத்துப் புகழில் ஆற்றொழுக்காக ஒடி, தனித்தமிழ்ப் புகழில் தந்தையாகி, தன்மானப் புகழில் தலைவனாகி, புலமைப் புகழில் செம்மலாகி, மும்மொழிப் புகழில் குரிசிலாகிப் புகழ்வாழ்வே நிறைந்த மறைமலையடிகளார் தம் புகழுடம்பை 1591950இல் அடைந்தார்.74ஆண்டு வாழ்வில் முன்னர்க்கண்ட தமிழின ஊற்றமும் தமிழ்முத்திரையும் சைவப்பகுத்தறிவு முழக்கமும் அரும்பி, மலர்ந்து, மனந்தன. W

ஆ. அரும்பிய தமிழின ஊற்றம்

நாகையில் சிறுவன் வேதாசலமாக வளர்ந்தபோது அங்குள்ள சூழ்நிலைகளால் அவரது உணர்வுகள் மற்றவர்களைவிட வேறுபட்டனவாகவே காணப்பட்டுள்ளன. அதிகம் வெளிப்போந்து விளையாடியோ சுற்றியோ திரியவில்லையென்றாலும் சிலநாள்களில் கடற்கரைக்குச் செல்வதும் கடலின் இயற்கை அழகில் மனந்தோய்வதுமாக மகிழ்ந்துள்ளார். அச்சூழலும் அங்கு வாழ்ந்த பரதவரின் வாழ்க்கையுமே அவர் உள்ளத்தில் சில உணர்வுகளைக் கெல்லின. -

அம்மக்கள் கந்தலுடையுடன் கட்டுமரத்தில் ஏறி, மீன்பிடிக்கும் வலைகளையும் சில வேளைகளுக்கு வேண்டிய பழைய சோற்றைப் பெரிய பானைகளில் அடைத்துக் கொண்டு கடலில் இறங்குவதை உன்னிப்பாகப் பார்த்துள்ளார். சற்று அளவான படகில் பலர் கூடிச் செல்வதையும் அன்னார்தம் உடல் உழைப்பையும் கூர்ந்து கவனித்துள்ளார்.

படகர் - பரதவர்

கடற்கரைவாழ் பரதவர் செம்படவர் எனவும் குறிக்கப்படுவர். படகுகளில் தொழில் செய்வதால் படகர் என்றும், அத்தொழிலைச் செம்மையாகச் செய்வதால் செம்படகர் என்றும் குறிக்கப்பெற்றனர். செம்படகரே செம்படவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/17&oldid=687077" இலிருந்து மீள்விக்கப்பட்டது