பக்கம்:தமிழ்மாலை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

நாகையில் நான் பணியாற்றியபோது கடற்கரைக்கண் உலாப்போவேன். ஒருநாள் மாலை, கடற்கரையில் சற்று கருத்து மப்பாக வானம் தென்பட்டது. மழை வருமோ என்று ஐயங்கொண்ட நான் அங்கு நின்ற ஒரு பரதவ முதியவரைப் பார்த்து மழை வருமா என்றேன். உடன் அவர் தம் கையை உயர்த்தி வானத்தில் வீசி எதையோ பிடிப்பவர் போல் காற்றைப் பிடித்து மூக்கில் கொண்டுவந்து மோந்து பார்த்து இன்னும் அரைநாழியில் நல்ல மழை வரும் என்றார். அவ்வாறே மழை பெய்தது. காற்றைப் பிடித்து அதன் குளிர்ச்சி கொண்டு மழை வருகையை உறுதியாக்கும் இவரும் வளிதொழில் ஆள்பவர்தான்.

- அவர்கள் பேசும் உறவுச் சொற்களும், கட்டுமரம் பற்றிய சொற்களும், படகு கட்டுவதுபற்றிய சொற்களும் தூய தமிழ்ச்சொற்கள். பரதவர்,நுளையர், நுளைச்சியர் முதலிய இலக்கியச் சொற்கள் வழக்கில்லாது போயினும் 'மீனவர் என்ற வழக்குண்டு.

இளைஞர் வேதாசலம் இவர்களது எளிய வாழ்க்கை முறையைக் கூர்ந்து கவன்த்துள்ளார். தமிழ் பயிலத் தொடங்கியதும் இவர்கள் பற்றிய இலக்கியச் செய்திகளையும் வாழ்வியலையும் பார்த்து பண்டைத் தமிழ் நெய்தல் நிலத்தவர் என்னும் ஒருவகைக் கவனம் இவர்கள்பால் விழுந்திருக்கிறது.

இன்னோர் கடற்கரையிலேயே மணல்மேடான பகுதியில் குடிசை அமைத்துக்கொண்டு வாழ்பவர்.இவர்கள் தொழிலுக்கு இவ்வாழ்வே ஏற்றது. ஊர்க்குள் இவர்கள் இடம்பெறுவதில்லை. இவர்கள் தீண்டப்படாதவராகக் கருதப்படாது போயினும் மேட்டுக்குடியினர் இவர்களுடன் கலந்து வாழ்வதில்லை. அவர்கள் அளவில் தீண்டப்படாதவராகவே கருதப்பட்டனர். அவர்தம் தொழிலால் நேரும் மீன் வீச்சு, மேட்டுக்குடியினர்க்கு அருவெறுப்பைத் தந்திருக்கலாம். எவ்வாறாயினும் மீனவர் ஒதுக்கப் பட்டவராகவே கருதப்பட்டனர். பழங்குடி மக்களைப்பற்றியும், திராவிட இனம் பற்றியும் சிறப்பாகப் படித்துவரும் திருவளர் வேதாசலத்திற்கு இவர்களைப் பற்றிய கவனம் எழுவது இயற்கையே. • &

இக்கவனத்தில் இவர் பழங்குடியினராகிய இவர்கள் ஒதுக்கப்பட்டவர்களாக ஊர்ப்புறத்திலேயே வாழ்வதும் மேட்டுக்குடியினர் இவர்களைத் தாழ்வாகக் கருதுவதும் மற்றொரு உணர்வை எழுப்பியது.

நாகை நகரத்தில் கி.பி. ஒன்று, இரண்டாம் நூற்றாண்டளவில் அகநகர்க்குள்ளே ஒர் ஆறு மேற்கிலிருந்து புகுந்து கிழக்காகப் பாய்ந்து கடற்கரையிலிருந்து ஏறத்தாழ 300 அடி அளவில் வடக்காகத் திரும்பி ஒடி நகரின் வடக்கெல்லையில் கிழக்கே திரும்பிக் கடலில் கலந்துள்ளது. இதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/19&oldid=687079" இலிருந்து மீள்விக்கப்பட்டது