பக்கம்:தமிழ்மாலை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

அத்துடன் இருக்கு மறைதமிழர்க்குப்பகையான நூல்-பகையை ஊடாடி வளர்த்த நூல் என்பதையும், அதன்கண் தமிழரை அஃதாவது திராவிடரைத் தஃக்குக்கள் என்றும், சூத்திரர் என்றும்தாழ்வுபடுத்துவதைப்பிட்டுக்காட்டினார்.

"ஆரியமொழியையும் ஆரிய நடையையும் பின்பற்றித் தம்மை

ஆரியரெனஉயர்த்திச் சொல்லிக்கொள்ளும் இஞ்ஞான்றை மாந்தர் பலரைப் போற்பண்டிருந்த ஆரிய மாந்தரும் தம்மவர் அல்லாதவர் பிறர் நன்கு வாழ்வதைக் கண்டு மனம்பொறாது. வயிறெரியும் வன்மையர் என்பது அவர் பாடின. இருக்கு மறைப் பதிகங்களினாலேயே நன்கறியக் கிடக்கின்றது" என்று வெளிப்பாடாக்கினார்.

தமிழரைத் தாழ்த்துவதற்கென்றே நால்வருணம் கண்டு அதில் நான்காமவராகச் சூத்திரர் என்ற சொல்லால் குறித்ததை ஒர்ந்து பார்த்து அடிகளார் வடமொழி மறைகள், மனு சுமிருதி முதலியவற்றில் குறிக்கப்படும் அச்சொல் விளக்கத்தை வைத்து அச்சொற்குப் பின்வரும் ஏழு பொருட்கள் உள்ளமையைக் கண்டு மனம் வெம்பி அப்பொருள்கள் பின்வருவன என்று எடுத்துக்காட்டினார்: - -

“அநாகரிகர், அறிவிலி, அடிமை, குற்றேவலர், வேசைமகன், சிறைப்பட்டோர். குற்றவாளி எனும் ஏழு பொருள்கள் கொண்ட சொல் அது என்று குறித்தார். - - - - -

மற்றொரு புது உண்மையை வெளிப்படுத்தினார். இருக்கு மறைக்குப் பின் வந்த உபநிடதங்கள் முன் மறையின் தவறான கருத்துக்களைச் சுட்டிக்காட்டி நல்ல தன்மைகளை பண்புகளை அறிமுகப்படுத்துவதை முதன்முதலில் கண்டு சொன்னவர் அடிகளாரே. அந்நற்பண்புகள் தம் மூதாதையர் இனமாகிய தமிழரின் தனிப் பண்புகளாக இருப்பவற்றைக் கண்டறிந்து வெளியிட்டார். -

உபநிடதம் தமிழர் படைப்பு

இதில் இவர் கண்ட உண்மை வடமொழி பயின்ற தமிழ்ப் புலவன்மாரே இவ்வுபநிடதங்களை உருவாக்கினர் என்பதாகும். இருக்கு மறைக்கும் உபநிடதங்கட்குமுள்ள முரண்பாட்டைக் கண்டு தன்இனத்தாரின் தகவுகளை இனமான உணர்வுடன் விளக்கி எழுதினார். இவற்றிற்கெல்லாம் சான்றாகப் பல வரலாறுகளை எடுத்துக்காட்டியுள்ளார்.

ஆரியருக்கு மன்னர்களே அரிய கருத்துக்களை வழங்கினர் என்பதற்கு

மன்னன் அசாத சத்துரு வரலாற்றிலிருந்து பாலாசிமுனிவர் மகன் ஒருவனுக்கு அவனறியாத மெய்ப்பொருள் உண்மைகளை அறிவுறுத்தியதைக் காட்டியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/22&oldid=687082" இலிருந்து மீள்விக்கப்பட்டது