பக்கம்:தமிழ்மாலை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

தமிழ் மன்னர் அரசினியர் எனப்பட்டனர். அதனையே இருக்குமறை "ராஜ்ந்யர்' என்பதையும் அவரையே அசுரர் என்றதையும் குறிப்பிட்டு அரசர் என்பதையே அசுரர் என்று குறித்து அவர் அரக்கர் என்று கூறியதையும் வெளிப்படுத்தினார்." o

இவ்வுணர்வுகளின் உந்துதலால் தம் இல்லத்து நிகழ்ச்சிகளை இறையுணர்வுடன் தமிழிலேயே தமிழர்களைக் கொண்டு நிகழ்த்தினார். தம் மாளிகையில் உருவாக்கிய அம்பலவாணர் கோயிலமைப்பிற்குக் குடமுழுக்கு விழா ஏற்பாடு செய்து தமிழ்ச் சைவ ஒதுவார்களைக் கொண்டு தமிழிலேயே நிகழ்த்தினார்.

கடலூர் சைவத்திருமடத்து ஞானியாரடிகள்பால் நேயம்பூண்டு, தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் துணையுடன் பார்ப்பனரும் வடமொழியும் அற்ற தமிழ்த் திருமணங்களை நிகழ்த்தத் திட்டங்கள் தந்ததுடன் தம் மகளார் திருமணத்தை அவ்வாறே நிகழ்த்திக் காட்டினார்.

நாகை வாழ்க்கையில் அதிலும் கட்டிளைமைப் பருவத்தில் முளைத்த அல்லது அரும்பிய இந்த இன ஊற்றம்-தமிழின ஊற்றம் சென்னை வாழ்க்கையில் ஆணிவேர் ஊன்றியது. தளிர்த்துத் தழைத்து மலர்ந்தது எனலாம். இவ்வுணர்வு வெடித்து மணம்பரப்ப மதுரை நிகழ்ச்சி ஒன்று களமாயிற்று. -

மதுரையில் தமிழ்ப்புலவர் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவிய தோன்றல் பாண்டித்துரையார், வேதாசலனார்பால் பேரார்வமும் பெருமதிப்பும் கொண்டிருந்தார். சங்கத்து மூன்றாம் ஆண்டுவிழாவிற்கு அழைத்துச் சொற்பொழிவு அமிழ்தம் மாந்தித் திளைத்தார்; நல்ல சிறப்பளித்துப் போற்றினார். அவர் தமிழ்ப் புரவலர் மட்டுமல்லர் தமிழ்ச் சான்றோருமாவர்; அத்துடன் பின்னிப் பிணைந்த தமிழ்ப் புலமையும் சைவப் பேரார்வமும் செறிந்தவர். இவற்றிற்கெல்லாம் இழையோட்டமாகத் தமிழின உணர்வும்-ான் ஊற்றமும் உள்ளவர் உள்ளுணர்வில் மிக்கவர். -

தம் தமிழ்ச்சங்க நான்காம் ஆண்டுவிழாவை அறிஞர் திரு. வி.கனகசபைப் பிள்ளை அவர்கள் தலைமையில் நிகழ்த்தினார். இவ்விழாவிற்குப்புலமைத்திருவேதாசலனாரையும் அழைத்திருந்தார்.

இந்நிகழ்ச்சிதான் தமிழ்த்திரு வேதாசலனாரின் ஊற்றத்தை வெடிக்கச் செய்தது.அதிலும் தலைமையேற்றவாறு தலைமையுரையே வெடிப்புத்திரிக்குப் பொறி ஏற்றியது. அறிஞர் வி. கனகசபைப்பிள்ளையவர்கள் 1800 ஆண்டுகளுக்குமுன் தமிழர்” என்னும் அரிய ஆங்கில நூலை எழுதியவர். சென்னையில் தலைமை அஞ்சலகத்தில் மதிப்பார்ந்த அலுவலராகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/23&oldid=687083" இலிருந்து மீள்விக்கப்பட்டது