பக்கம்:தமிழ்மாலை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

பணியாற்றியவர்.யாழ்ப்பாண மூதாதையரைக் கொண்டவர். தமிழ்ப்புலமையில் குறைவில்லாதவர். அவர் ஆற்றிய தலைமையுரை எவ்வகையிலும் தமிழுக்குச் சிறப்பளிப்பதாக இல்லை என்பதை விடத் தமிழைத் தாழ்த்துவதாக அதன்மூலம் தமிழ்ச் சான்றோரை இழிவுபடுத்துவதாக அமைந்தது. அப்பேரரங்கில் பெரும்புலவர்கள் இரா. இராகவையங்கார், திரு நாராயண ஐயங்கார், உ.வே. சாமிநாத ஐயர் முதலியோர் பங்கேற்றனர். தமிழ்த்திரு வேதாசலனாரும் பங்கேற்றார். இது நிகழ்ந்தது.1905-இல், அப்போது அவருக்கு அகவை 29. கட்டிளமையின் மிடுக்கு புலமை மெருகுடன் விளங்கிய பருவம்.

தலைமையுரையில்தான் என்னதான் பொதிந்திருந்தது? அக்காலச் சூழலை நோக்க ஒன்றும் புதிய கருத்தில்லை. பேரவையில் இருந்தோர்க்கும் வேறுபட்ட கருத்தில்லை இருவர் தவிர. மன்றத்தில் வேறுபட்ட கருத்துள்ளோர் அமர்ந்திருந்தாலும் பெரும்புலவர்கள் பேச்சில் மூழ்குபவர்கள்.கருத்தென்ன?

"தொல்காப்பியர் திரணதுரமாக்கினி என்னும் ஆரியர் அகத்தியரும் அவ்வாறே. திருவள்ளுவரும்பூரீவல்லபரே. இன்னோரன்ன ஆரியப்பார்ப்பனர் செய்திருக்கும் தமிழ்ப்பணிக்கு தமிழர் மிகவும் கடமைப்பட்டவர்கள்.'இதுதான் கருத்து.


நான்கு கோடிப் பொதுவான தமிழரிலே

பொன்னான தமிழ்வெறுத்தோர் பெரும்பா லோராம்'

என்று பாவேந்தர் பாடியது போன்று தமிழகத்தில் தமிழ் படித்த பெரும்பாலோர் ஆரியர்க்குத் தமிழர் கடமைப்பட்டவர் என்னும் புலமையில் ஊறியவர்கள்.

பாவேந்தர் சுட்டிய பெரும்பாலோரினும் ஒதுங்கித்தனியே நின்றதமிழர் வேதாசலனார் இன்னும் மறைமலையடிகள் ஆகவில்லை. இளமை முடியில் நின்று ஆரியர்க்குக் கடமைப்பட்டவர் தமிழர் என்பதில் முற்றிலும் மாறுபட்டவர். சென்னைப் பேச்சுகளில் இதனை அவ்வப்போது வெளிப்படுத்தியும் வந்தார். இதனை மனத்துள்கொண்டே அறிஞர் வி. கனகசபை அவர்களால் அவ்வாறு தலைமையுரை நிகழ்த்தப்பட்டதோ என்றுகூட ஐயுறலாம்.

தமிழின ஊற்றமுள்ள வேதாசலனார் அத்துனைக் கருத்துக்களையும்

தக்க சான்றுகளுடன் மறுத்தார்; வன்மையாக மறுத்தார்; கடுமையாக

மறுத்தார், வைரம் பாய்ந்த சான்றுகள் காட்டினார். இருக்கு மறையிலிருந்தும்

பிற வட நூல்களிலிருந்தும் அவற்றிற்கேயுரிய உரிமைக் கருத்துக்களை

எடுத்துக்காட்டி, தொல்காப்பியம், திருக்குறள் பதித்துள்ள அவற்றிற்கு

முரண்பட்ட கருத்துக்களை எடுத்துவைத்து மறுத்தார். பாணிணி இயற்றிய 'அட்டாத்தியாயி’ என்னும் வடமொழி இலக்கண நூலுக்கு நானூறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/24&oldid=687084" இலிருந்து மீள்விக்கப்பட்டது