பக்கம்:தமிழ்மாலை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ஆண்டுகளுக்குமுந்தியது.தொல்காப்பியம் என்னும் வடமொழி,தமிழ்,ஆங்கிலம் ஆகிய நூல்களிலிருந்து கருத்துக்களையும் பல்வகை ஆய்வாளர் கருத்துக்களையும் எடுத்துக்காட்டினார்.

அவை களைகட்டியது. வருங்கால அடிகளாருக்கும் கள்ைகட்டியது. வடமொழி எழுத்தில்லாமல் இருந்தகாலத்தில்எழுத்திற்கு உருவம் காட்டியது தொல்காப்பியம் என்று காட்டினார். தமிழர்பினிசியரின் வழிவந்தவர் என்னும் கருத்தை உடைத்தார். பணிகர் என்னும் தமிழரே பரவிச் சென்று பினிசியர் ஆயினர்' என்று மொழி மூலத்துடன் காட்டினார். பணிகரே வணிகர்’ என்று

'இருக்கு மறையில் வரும் மனா’ என்னும் சொல்கொண்டு - தமிழர்க்கு நிறுவை முறையைச் சொல்லிக் கொடுத்தவர் ஆரியர்' என்று வைக்கப்பெற்ற கருத்தை மனா-மணங்கு என்று இக்காலத்தில் வழங்கப்பெறும் நிறையளவை மணங்கு என்னும் சொல்லின் முன்னுருவமே என்று காட்டித்தகர்த்தார். - .

அவை மேடை மட்டுமன்று மன்றத்திலும் கலகலப்பேறியது. பாண்டித்துரையார் உள்ளம் குளிர்ந்ததை முகம் எடுத்துக்காட்டியது. புலமைக்கருத்துக்களில் சுருண்டு கிடந்த மன்றத்துப் பொதுமக்கள் வரவேற்பு ஆரவாரம் செய்தனர்.

இந்திய நாட்டின் முதல் எழுத்துமுறை தமிழரால்தான் துவங்கியது என்பதற்கு இருக்கு மறை தொடங்கி பாணினி இலக்கணம் தொடர்ந்து பல சான்றுகள் காட்டியதுடன் ஆங்கில அறிஞர் ஆய்வுக்கருத்தொன்றையும் எடுத்து வைத்தார். அது இது: -

"தற்போது கிடைத்துள்ள சான்றுகளை வைத்துக்கொண்டு பார்த்தால் இந்தியாவின் எழுத்துமுறை ஆரியரது அன்று. இந்தியாவில் இவ்வெழுத்துத் தொடக்கம் திராவிட வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதே" “All the present available evidence tends to show that the Indian, alphabet is not Arian at all; that it was introduced into India hy Dravidian Merchants"

இக்கருத்தை நம்காலத்தில் வாழ்ந்த வடமொழிப் பேராசிரியர்அகழ்வாராய்ச்சிப் பேராசிரியர் இராகுல சாங்கிருத்தியாயர் தம் 'வால்காவிலிருந்து கங்கைவரை' என்னும் நூலில் கதைப்பர்ங்கில் உறுதியாகவும் நயமாகவும் உண்மை காட்டியுள்ளார். வரலாற்று அடிப்படையில் வடபுலத்து வைசாலி நாட்டு ஆசானால் செய்திகள் அறிந்து வருமாறு :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/25&oldid=687085" இலிருந்து மீள்விக்கப்பட்டது