பக்கம்:தமிழ்மாலை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

விடுக்கப்பெற்ற இரண்டுமாணவர்கள் உரையாடலாக வைத்து,தெற்கிலிருந்து வந்த மாணவன் கூற்றாக, r

"வாய் திறந்து பேசாமலே அவர்களால் சம்பாதிக்க முடிகிறது. மண், கல், தோல் முதலிய ஏதாவது ஒன்றில் ஒர் அசுரன் (திராவிடன்) சில அடையாளங்களைக் கிழித்து மற்றவனிடம் கொடுப்பான்.அடுத்தவன் எல்லா விசயங்களையும் தெரிந்துகொள்வான். நாம் இரண்டு மணி நேரம் பேசியும் விளங்கவைக்க முடியாத ஒரு விசயத்தை அவன் இரண்டு மூன்று கோடுகளை இழுத்து விளங்க வைத்துவிடுகிறான். இந்த விசயத்தை ஆரியர்களாகிய நாம் இதுவரை அறியவே மாட்டோம். இப்பொழுதுதான் நம்முடைய ஆரியர் இந்தக் கோடுகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், வருசக்கணக்காக முயன்றும் அவர் இன்னும் பூரணமாகக் - கற்றுக்கொள்ள முடியவில்லை" . . . . . என்று சான்றுகளுடன் காட்டியுள்ளார். இதனை இங்கு நான் காட்டுவது பொருத்தமானதே. - : - .

தொடர்ந்து சொற்பொழிவுகளில் தமிழின ஊற்றத்தை மலர்த்தினார். தமிழர்-திராவிடர், உலகில் முதன்முதலில் தோன்றியமுதற்குடியினர் என்றும் அவர் பரவியே பிறஇனத்தாரைத் தோற்றுவித்தனர் என்றும், அவர்தம் தமிழ் மண் நாகரிகமே பண்பாடுடையது' என்றும், இதனைக் கண்டு மேலையாராய்ச்சியாளராம் மாக்சுமுல்லர், ஈராசு, கால்டுவெல் முதலியோர் பலபடப் பாராட்டி எழுதியுள்ளனர் என்றும் அழிந்த நூல்கள் போக எஞ்சியவற்றில் முழுநூலாகக் கிடைத்துள்ள தொல்காப்பியம் இற்றைக்கு4500 ஆண்டுகட்கு முற்பட்டதென்றும் ஆணித்தரமாகக் கூறினார். கி.பி.1400-க்கு முற்பட்டதாக வரையறுக்கப் பெற்றுள்ள பாரதப் போர்க்காலத்தில் இரு பகைப்படைகளுக்கும் பண்பாட்டுடன் சோறளித்த உதியஞ் சேரலாதன் திறத்தையும் சோறளித்த அமைதித் தகவையும் காட்டி அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தோன்றி வளர்ந்த பண்பாட்டின் வழி வகைகளை விவரித்துநிறுவினார். • ,

சூடுபிடித்த கூட்டம் தெளிவுபெற்று நிறைந்தது. தமிழ்த்திரு பாண்டித்துரையார் பலபடப் பாராட்டினார். உண்மையாகவே இப்பொழிவு தமிழகத்தில் ஒரு விழிப்புணர்வைத்துண்டியது. தமிழனின் தனித்தகவுகளை நிறுவும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார். இத்தமிழ்ச் சங்கத்துப் பொழிவே பின்னர் பண்டைத்தமிழரும் ஆரியரும் என்னும் நூலாயிற்று.

தொடர்ந்து சென்னையில் தமிழர் நாகரிகம், திராவிடர் நாகரிகம் முதலிய சொற்பொழிவுகளும், சீர்திருத்தக்குறிப்புகள் என்னும் வெளியிடும் அடிகளாரின் தமிழ் ஊற்றத்தை வைாப்பதிவாக்கின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/26&oldid=687086" இலிருந்து மீள்விக்கப்பட்டது