பக்கம்:தமிழ்மாலை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

'நான்மறை என்பது தமிழில் உருவான மறைகள் நான்குதான் வேதம் எனப்பெறும் வடமொழிநூல்கள் அன்று என்பதே அடிகளாரின் ஆழ்ந்த கருத்து. . இதற்குக் காட்டிய காரணங்கள் வடமொழி வேதங்கள் நான்கும் வேறுபட்ட சில இடங்களில் மாறுபட்ட கருத்துக்களைத் தருபவை; அவை தமிழினத்திற்கு ஒவ்வாதவை; தமிழினத்தைத் தாழ்த்துபவை என்பனவற்றைத் தம்நூல்களில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். ஆரியர் வேறு பார்ப்பனர் வேறு

மற்றும் அவர் கருத்து ஒன்று; அவ்வடமொழி வேதங்கள் பல முனிவர்களால் கூறப்பட்டும், மனப்பாடம் செய்யப்பட்டும் தொகுக்கப்பெற்றவை. அவற்றின் பதிகங்களில் சில வடமொழி பயின்ற தமிழ் முனிவர்களால் எழுதப்பெற்றவை என்பது அவர் தம் கருத்து. அதற்குச் சான்றாக அவர் கொண்ட அடித்தளக் கருத்து, ஆரியர் வேறு, பார்ப்பனர் வேறு, தமிழரில் வடமொழிகற்று அதிலுள்ள மரபுகளில் மனம்பற்றித்தம்மை ஆரியர்களாக்கிக் கொண்டு அவர்போல் மற்றவரைத் தாழ்வாகக் கருதியும், அதனால் தாம் உயர்ந்தவர் என்று கொண்டு வாழ்ந்தவர்' என்பார். பார்ப்பனரென்று சொல்லிக்கொண்டு கோயிலில் வழிபாடு செய்யும் குருக்கள் உண்மையில் பார்ப்பனரல்லர். பண்டைக்கோயில்களில் பூசெய் செய்த தமிழ் இனத்தவரே' என்கின்றார். இஃது பெருமளவில் உண்மையே. நற்றிணை காட்டும் 'குயவர் கோயிற்பூ செய்பவர். அவர் தலையில் நொச்சிப்பூவைச் சூடிக்கொண்டு தெரு வழிச் சென்றால் ஊர்மக்கள் அதனைக்கோயில் திருவிழாவின் அறிவிப்பாகக் கொள்வர் என்னும் கருத்து ஈண்டு நோக்க வேண்டியதாகின்றது. குயவர்கள் பூசெய்து வந்த பழநிக்கோயிலுக்குஇராமநாதபுரம் திவான் திரு.சிவராமையர் என்பார் தம் வயிற்றுநோவு தீரச் செய்த ஏற்பாடும் இங்கு நினைக்கத்தக்கது. அவர் தம் வயிற்றுவலி திரப் பழநிக் கோயில் திருநீற்றை அருந்தலாம் என்று கூறப்பெற்றது. "அங்கு கீழ்இனத்துக் குயவர் பூசெய் செய்வதால் அவர் வழி நீறு பெறுவது மேலினத்தவராகிய நமக்கு ஏலாது” என்று மேலினத்தார் கூறியதால் உடன் திவான்பூசெய் செய்துவந்த குயவர் குடும்பத்திற்குமாற்றாக ஐந்து ஐயர் குருக்கள் குடும்பத்தை அமைத்தார். இஃதும் தமிழர் குருக்களாயிருந்து ஐயருக்கு மாறிய தொடர்பைக்குறிக்கும்.

எனவே, பார்ப்பனர் என்போர் ஆரியரல்லர் தமிழரின் மாற்றுருவே' என்றார் அடிகளார். இருக்குமறை தோன்றுவதற்குமுன்னரே தமிழில் நான்கு மறைகள் இருந்தன என்றும், அவற்றையே சங்க இலக்கியங்களும், தேவார திருவாசகங்களும் நான்மறை, நால்வேதம் என்றெல்லாம் குறித்தன என்றும், பின்னரே இந்நான்கைப் போன்று வடவேதமொழியில் வேதங்கள் பலரால் கூறப்பட்டுப் பின்னர் வேதவியாசரால் நான்காகப் பகுக்கப்பட்டன என்பதே அடிகளாரின் முடிந்த முடிபு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/28&oldid=687088" இலிருந்து மீள்விக்கப்பட்டது