பக்கம்:தமிழ்மாலை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நான்மறை

இம்முடியிற்குஇவர் சான்றுகளுடன் கூறும் விளக்கத்தைச்சுருக்கமாகக் காணலாம். “கல்லாலின் கீழிருந்துநால்வர்க்கு அறமுரைத்தவைதாம் நான்கு மறைகள். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள்கள்தாம் அந்நான்கறம் நால்வர்க்கு உரைத்ததையும் எண்ணளவில் ஒரு பொருத்தமே. இருக்கு முதலிய வடமொழி வேதங்களில் இந்நான்கு பொருள்களுமோ, நால்வர்க்குச்சிவபெருமான் அறம் உரைத்ததோ எங்குமில்லை.அவை நான்கும் வேதம் தோன்றியதற்கு வெவ்வேறு வகைப்பட்ட, மாறுபட்ட, முரண்பட்ட கருத்துக்களைத் தருகின்றன. பிரமன் உரைத்தான் என்கிறது ஒன்று; பிரமன் தாடி மயிரிலிருந்து நான்கு வேதங்கள் தோன்றின என்கின்றது மற்றொன்று. பல முனிவர்களால் அவ்வப்போது கூறப்பெற்று அவ்வப்போது தொகுக்கப்பெற்றன வேதங்கள் என்கின்றது ஒன்று.இவ்வாறு பலவகைப்பட்ட பொருந்தாத கருத்துக்களையே தருகின்றன. மற்றும் வேதம்’ என்னும் சொல்லுக்கு மறைபொருளான கருத்துக்களை அறங்களைக் கொண்டது” என்பது பொருள். அம்மறைபொருள்களையே கல்லாலின் கீழிருந்து விளக்கினார். வேதம் என்னும் சொல்லும் தமிழ்ச்சொல்லே. இதற்கு வே. என்பது முதனிலை. வேய்தல்’ என்னும் சொல்போல பல சொற்கள் இம்முதனிலையில் பல்கின. வேய்தல்' என்றால் மூடிமறைத்தல் என்ற கருத்து. இதுபோன்றேவே அம் இடையில் த் எழுத்துப்பேறு கொண்டு வேதம்’ என்று ஆகி மறைபொருளைக் கொண்டது' என்னும் பொருளைத் தந்தது. அறிவுறுத்தியதால் அஃதொரு அறிவு நூல். இருக்கு வேதத்தில் ஒரிடத்தில் மட்டும் வரும் வேதம்’ என்னும் சொல்லுக்கு அறிவுநூல் என்னும் பொருளில்லை."புல் கட்டினால்'என்னும் பொருளிலேயே உள்ளது.பாரதத்திற்கு முற்பட்ட பாடலாகிய முரஞ்சியூர் முடிநாகராயர் பாடலில் வரும் 'நால் வேதநெறி திரியினும்” என்பதில் தமிழ் நான்மறைகள்ே குறிக்கப்படுகின்றன. இதற்குப் பின்னரே பாரதம் பாடிய வியாசரால் நான்காக வடமொழி வேதம் வகுக்கப்பெற்றது. . . . . -

இவ்வாறு விரிவாக வடமொழி-வேதமொழிகளைச் சான்றாகக் காட்டி விளக்கியுள்ளார். இவற்றைக் கொண்டு நோக்கினால் பாவேந்தர் பாடிய, "மறைநூல் என்பது தமிழ்நான்மறை நூல்” என்றும் முறையாய் இவைகட்குச் சான்று காட்டி முழங்கிய புலவன் என்றும் பாடியமை பொருந்துகின்றது. . . . . -

அண்மைநாளில் நம்நகர்திரு.உ.சுப்பிரமணியம் அவர்கள் நான்மறை எனப்படுவது தமிழ்மறைதான் என்று நூல் எழுதி வெளியிட்டதையும், அதற்குத் தமிழ்ப்பல்கலைக்கழகம் பரிசு வழங்கியதையும் அறிவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/29&oldid=687089" இலிருந்து மீள்விக்கப்பட்டது