பக்கம்:தமிழ்மாலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

இவ்வகையிலும் அடிகளார் தமிழ் நான்மறைகள் என்று தமிழனின் படைப்பைக் காட்டித் தம் தமிழின ஊற்றத்தை நிலைநாட்டினார். அடிகளாரது இவ்வாறு வளர்ந்த பாங்கையெல்லாம் கருதித்தான் அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், ! - -

மறைமலையடிகள் பல்வேறு கருத்துக்களை தமிழன் தனியானதோர் மாண்புக்கு-பண்புக்குச் சொந்தக்காரன் என்பதை வலியுறுத்தும் கருத்துக்களை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார்" . என்று பதிவாக்கினார்.இது அடிகளாரின் தமிழின ஊற்றத்திற்கு மறுமுத்திரை. இம்முத்திரைகளை அழிக்காத முத்திரை அடிகளாலேயே குத்தப்பட்டது. அதுதான் தமிழ் முத்திரை. அதன் முழுஉருவம் தனித்தமிழ் முத்திரையாகும்.

இ.தமிழ் முத்திரை - - • , .

இத்தனித்தமிழ் முத்திரை குத்தும் அச்சுக்கட்டையை உருவாக்கியது அடிகளார் தம் மகள் செல்வி நீலாம்பிகை. இம்மங்கை அடிகளார் தமிழ்ஊற்றத்தில் சமமான நிலையுள்ளவர். இளமையிலேயே தந்தையார் போன்று அறிவுத்திறமும் நுணுக்கமும் உடையராகத்திகழ்ந்தார்.

பல்லாவரம் மாளிகையில் ஒருநாள் மாலை அடிகளார் தம் மகள் செல்வி நீலாம்பிகையுடன் உலவி வரும்போது வழக்கம்போல் சைவப்பாடலைப் பாடி வந்தார்.அன்று பெற்றதாயினைமகமறந்தாலும் என்னும் பாடலைப்பாடினார். இதில் இரண்டாவது அடியாகிய "உற்ற தேகத்தை உயிர்மறந்தாலும்” என்று பாடியவர், அங்கு நிறுத்தி நீலாம்பிகையைப் பார்த்து, “நீலா, உற்ற தேகத்தை என்பதிலுள்ள 'தேகம் என்பது வடசொல் அதனை நீக்கி யாக்கை என்னும் தமிழ்ச் சொல்லை அமைத்தால் ஒசையும் நன்றாக இருக்கிறது; சொல்லும் தமிழாகும்” என்றார். - - -

கேட்ட தமிழ்மகள் செல்வி நீலாம்பிகை"ஆம், அப்படியே செய்யலாம்: அப்படியே பாடலாம். இதுபோன்றே நாம் பேசும்போதும், எழுதும்போதும் வடசொல் கலவாமல் தனித்தமிழிலேயே பேசுவதும் எழுதுவதும் இனிமையும் முறையும் ஆகும்” என்றார். கேட்ட அடிகளார். தமிழில் வடமொழி கலப்பதால் தமிழின் தூய்மை மட்டுமன்று ஒசைஇனிமையும், சில இடங்களில் பொருள் சூழலும் கெடுகின்றன. இனி இவ்வாறே செய்வோம் என்றார்.

அடிகளார் இதனை ஒரு நடைப்போக்கில் ஒரு கருத்தாகத்தான் கூறினார். செல்வியோ அதனைக் கொள்கையாக்கிவிட்டார். தனித்தமிழ்' என்னும் சொல்லும் உருவாகச் செய்தார். அவருக்கு அப்போது அகவை 13, இது நிகழ்ந்தது 19 6-இல் அதுமுதல் செல்வியும் அடிகளாரும் வடமொழி கலவாத ஆங்கிலம் கலவாத தனித்தமிழிலேயே உரையாடினர். பேசினர்:

எழுகினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/30&oldid=687090" இலிருந்து மீள்விக்கப்பட்டது