பக்கம்:தமிழ்மாலை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

செல்வி நீலாம்பிகையால் துவங்கப் பெற்ற தனித்தமிழ்க் கொள்கை கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டுவிழா மேடையை முடுக்கிவிடும் களமாக்கிக் கொண்டது. 1927-இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 15, 16 ஆவது ஆண்டு விழாக்கள் இணைந்து ஒரு விழாவாகக் கொண்டாடப் பெற்றன. அடிகளார் தலைமைக்கு அழைக்கப் பெற்றிருந்தார். பேராசிரியர்கள் ந.மு.வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், தமிழவேள் உமாமகேசுரனார், கவியரசு வேங்கடாசலனார் முதலிய பெருமக்கள் பங்கு கொண்டனர். அவ்விழாவில் இரண்டாம்நாள்முடிவுரையில் அடிகளார்.

'ஆ' என்றால் பலருக்கு விளங்காது. 'பசு' என்றால் விளங்கும். 'ஆ என்பது தனித்தமிழ்ச் சொல். தண்ணீர் என்று உரையாது. நம் மக்களிற்பலர் ஜலம்’ என்கின்றனர். ஐயகோ! மலையாளிகள் கூட வெள்ளம் என்னும் தனித்தமிழ்ச் சொல்லை வழங்குகின்றனரே” என்றார் எதிரே அமர்ந்திருந்த பண்டிதமணி அவர்கள்,

"அப்பரடிகளே”சலம்பூவொடுதுபமறந்தறியேன்” என்று ஜலம் என்ற சொல்லைத் தமிழுருவில் வழங்கியுள்ளாரே என்றார்.

அத்தடைவிடை பெருகியது.இதற்கும் அடிகளார்,

" சலசல என்னும் துணையுடன் ஒடுதலின் சலம் எனப்பெற்றது. எனவே, சலம் தமிழ்ச்சொல். அது வடமொழியாகுமானால் 'நீர் என்று தனித் தமிழில் வழங்கலாம்” என்றன்ர், தமிழ்ப்புலவரே அறிஞர் பேரறிவுடைய பெருமகனே இவ்வாறு கூறுவதைப்பொறுக்க இயலாதவராகச் சற்று உணர்ச்சிவயப்பட்டவராக

"தமிழிலே கடவுளை வணங்கக்கூடாது என்று கூறும் பார்ப்பனர் உளர். பெரியோர் தமிழைப் பழித்துப் பாழ்செய்தால் அது குற்றம் இல்லையோ? இப்படிப்புலவர் பலர் தனித்தமிழுணர்ச்சி தகுதியற்றதென்று மொழிந்து தமிழைப் பாழாக்கினால், ஐயகோ என்செய்வது:” - என்று சற்று உயர்த்திய குரலில் முழங்கினார். தொடர்ந்த சொற்போரில் அடிகளார், "பழம்புலவர்கள் இதில் தவறே செய்துள்ளனர். அதனால் அத்தவற்றைச் செய்து தமிழைக்குறைக்கவேண்டுமா?” என்றும்,"இவ்வாறு வழக்கிலுள்ள இலக்கியங்களிலுள்ள பொருள் பொதிந்த தமிழ்ச்சொற்கள் மாறி வடமொழியால் மறைக்கப்படுவதால் நாளடைவில் அச்சொற்கள் வழக்கற்று மறைந்து போகுமே! இவ்வாறே போனால் உரியதமிழ்ச்சொற்களே இல்லாமல் தமிழே ஒரு புது மொழிபோல் ஆகிவிடுமே".என்றெல்லாம் கவன்றும், சற்று கனன்றும் உரையாற்றினார். இந்நிகழ்ச்சி அம்மன்றத்தில் ஒரு புதுமலர்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/32&oldid=687092" இலிருந்து மீள்விக்கப்பட்டது