பக்கம்:தமிழ்மாலை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

சொல்ல ஒன்றும் இல்லைதானே? இவ்வுண்மையை எடுத்துச் சொல்லிய புலவரை ஏன் தமிழுணர்ச்சி இல்ல்ாதவராகக் குற்றஞ் சொல்லவேண்டும் அஃது இயல்பே, அதற்குரிய சூழலை அவர் கருதாது போனமையே குற்றம். தமிழின் நூற்கடலில் கடல்கோள் கொண்டவை அதிகம்.தொல்காப்பியத்தில் ஏறத்தாழப் பத்து சொற்களும், திருக்குறளில் எட்டு சொற்களும், அவையும் தமிழாக இருக்கலாம் என்று கருதும்போது அழிந்து போன் முந்தையத் தமிழ் நூல்கள் வடமொழி பெறாமலே அமைந்திருக்கும் என்று ஏன் அவ்வாசிரியர் கருதவில்லை. அவ்வாறு கருதுவதை மேலையாசிரியர் மேற்கொண்டபோது தமிழ்மண்ணில்பிறந்தவருக்கு ஏன் அவ்வெண்ணம் எழவில்லை? -

"ஆரியர் இந்தியாவில் புகுந்தபின் தமிழருடைய நாகரிக முதிர்ச்சியினையும், அவர் தாம் கருதிய பொருளை எழுத்திலிட்டுப் பொறித்ததுங் கண்டு தாமும் தம்முடைய பாட்டுக்களைப் பண் அடைவுபட வகுத்தபோது எழுத்துமுறையைக் கண்டறிந்தார்” என்று ஆங்கில அறிஞர் கோல்டு ஃச்டக்கர் என்பார் ஆய்ந்து வெளிப்படுத்தினார். அவர் தமிழ் உணர்வால் அவ்வாறு காட்டவில்லை உலக மொழிகளின் அறிவைக் கொண்டு காட்டினார். எம்மொழி அறிவும், இருக்க வேண்டிய தமிழுணர்வும் இல்லாமையால்தான் இலக்கணக்கொத்து ஆசிரியர் ஒப்பீட்டியல் அறிவும் இல்லாமல், - “ஐந்தெழுத் தாலொரு பாடையென் றறையவே நாணுவர் அறிவுடை யோரே யாகையால் யானும் அதுவே யறிக" என்று தன்னை அடையாளங்காட்டினார். எழுத்துக்களே பெறாமல் வாய்மொழியாகவே இருந்தவடமொழி தமிழ் எழுத்துமுறையைக் கண்டுதான் எழுத்துமுறைபெற்றதென்னும் உண்மையைநினைக்கும்போது, பின்தோன்றி எழுத்துப்பெற்ற மொழியை விட ஐந்து எழுத்துக்களே உள்ள மொழி தமிழ்' என்று ஒப்பீட்டியல் அறிவின்றிச் சொல்லியதை எண்ணினால்தான் அவ்வாசிரியரின் தமிழ்உணர்வில்லாக்குற்றத்தின் உண்மை புலப்படும்.மற்றும், அவ்வொப்பீடு அறிந்தவர் போன்று, .

வடமொழி தமிழ்மொழி யெனுமிரு மொழியினும் இலக்கணமொன்றே” * - என்று தவறான தம் ஒப்பீட்டை வெளிப்படுத்தினார்.

வடமொழி பொருளிலக்கணம் இல்லாதது. தொல்காப்பியர் எழுத்தியலில் பன்னிரெழுத்தும் உயிரென மொழி என்றார்.வடமொழியில் உயிரெழுத்து 13.அவற்றில்"ரு ரூலு" என்னும் உயிர்மெய் ஒலிஎழுத்துக்கள் அமைத்திருப்பது. பொருத்தமற்றது. சொல்லதிகாரத்தில் உயர்திணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/34&oldid=687094" இலிருந்து மீள்விக்கப்பட்டது