பக்கம்:தமிழ்மாலை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

தனித்தமிழ்க் கொள்கையில் ஊறியிருந்த அடிகளார் பல புலவாகள் தமிழ்ச் சொற்களை அவற்றின் வேர்ச்சொல் காணாமல் வடசொற்கள் என்று கருதிப் பேசி வந்ததை மனத்துட்கொண்டுபல சொற்களை வேர்ச்சொல்லுடன் பொருள்கண்டு எழுதிக்காட்டினார். சான்றுக்கு ஒன்று:

“குனிந்து நீண்டிருக்கும் கோபுரம் ஆதலாலும், இது தென்னாட்டுத் திருக்கோயில்களிலன்றி பழைய வடநாட்டுக் கோயில்களில் காணப்படாமையாலும் கோபுரம் என்னுஞ்சொல் வடமொழிக்குரியதாகாது; தமிழ்மொழிக்கே உரித்தானதாமென்க” இவ்வாறு தமிழிருக்க வடசொல்லைக்கூறும் இழிநிலையைக் கண்டஅடிகளார் மனங்கவன்று அவ்வாறு செய்வோருக்காகத் தாம் நாணிக் கூறினார்:

"இசை தமிழ்ச்சொல், இராகம் வடசொல். இராகம் என்றால்தான் பெரும்பாலான மக்கட்குத் தெரிகின்றது. ஆதலால் இராகம் என்று சொல்லித்தான் இசையைப்பற்றி விளக்க வேண்டிய நாணக்கேடான நிலை தமிழர்க்கு உண்டாகியிருக்கிறது”

என்றார்.

தனித்தமிழ் என்னும் இக்கொள்கை மறைமலையடிகளார் ஒருவர்மட்டுமே கொண்டது போன்றும் தமிழில்மட்டுந்தான் இப்படிப் பேசப்படுவது போன்றும் பலர் உரைப்பது அறியாமையால் கூறப்படுவதாகும். தமிழில் வினைமொழிகளாகிய கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்றும் தமிழில் வடசொல் கலப்பால் உருவான மொழிகள். அவை உருவாகி ஒருநிலைக்கு வந்ததன் பின் மேலும் வடசொல்-பிறசொற்களைக் கலப்பதற்குப் பெரும் எதிர்ப்பும் நேர்ந்தது. அவ்வம்மொழிப் புலவர்கள், அறிஞர்கள் தத்தம் மொழிகட்குத் தனித்தன்மை வேண்டுமென்று கருதிச் செயற்பட்டனர். கன்னடத்தில் இராட்டிரகூட மன்னனாகிய நிருபதுங்கன் என்பவன் தன் 'கவிராசமார்க்கம்'என்னும் நூலில்,

“கன்னடத்தில் சமஸ்கிருதச் சொற்களைக் கலப்பது சுடுபாலில் மோரை ஊற்றுவது போன்று தீதாகும்" என்று எழுதியுள்ளான்.கன்னடத்தில்தனிக்கன்னடம் திருள் கன்னடம்'என்று தனிப்பெயரே பெற்றது. தெலுங்கில் தனித்தெலுங்கு 'அச்சதெலுகு' எனப்படும். தனிமலையாளக் கொள்கையர் உள்ளனர்.அவர் பச்சை மலையாளம் என்னும் தலைப்பில் செயற்படுவர்.தனிக்கன்னட,தனிச் தெலுங்கில் நிகண்டுநூல்கள் எழுதப்பெற்றுள்ளன.

அன்றும் - இன்றும் தமிழ் அறிஞர்களிடையே பலரிடம் ஒரு மொழிக்கருத்து'நிலவுகிறது. தனித்தமிழ் என்றால் ஏதோ ஒதுங்கியிருப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/36&oldid=687096" இலிருந்து மீள்விக்கப்பட்டது