பக்கம்:தமிழ்மாலை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{}

போன்றும் அவ்வாறு சொல்லி ஒதுங்கிப்பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழை வளப்படுத்தாது விடுவதாகக் கூறுகின்றனர். அதற்குச் சான்றாக ஆங்கில மொழியைக் காட்டுகின்றனர். ஆங்கிலம் பலமொழிகளிலிருந்து சொற்களைக்கூட்டிக்கொண்டுவளர்ந்துள்ளதாகக்காட்டுகின்றனர்.ஆங்கிலம் மிகப்பிற்காலத்தே தோன்றியது.சொற்களைத் தொகுத்துக்கொள்ள வேண்டிய இன்றியமையாமை கொண்டது. ஆகவே கடன்வாங்கிற்று.ஆனால் கடன்வாங்கி ஒர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டபின் அவ்வாறே மேலும் மேலும் கடன் வாங்குதல் கூடாது என்னும் கருத்தையும் ஆங்கிலேயர் கொண்டனர். இதற்கென ஓர் இயக்கமே எழுந்தது. கேம்பெல் என்னும் ஆங்கிலப் பேரறிஞர்

"ஒரு மொழி பிறவகைகளில் அழிந்துபடுவதினும் பிறமொழிச் சொற் கலப்பால் அழிவது பெருந்துன்பமாகும்” என்றார்.தனித்தமிழை வேண்டாது குறைகூறுவோர்.இதனைக்கருதிப்பார்த்தல் நலம். . + , “ - -

அறிஞர் அடிசன் இதனினும் ஒருபடி மேலே போய், "நமது சட்ட அமைப்பில் உரிமை, வாணிகச் சட்டம் முதலியவற்றைப் பேனும் கண்காணிப்பாளர்களை அமைக்க விதி இருக்கின்றது. அதுபோன்றே பிறமொழிச் சொற்கள் தன் தாய்மொழியில் (ஆங்கிலத்தில்) கலவாமல் பேணும் கண்காணிப்பாளரை அமைக்கும் விதி வேண்டும்" என்றார். அவர் கி.பி.1672. 1719 கால வாழ்வினர். மொழிக்கலப்பை ஒரு குற்றமாகக் கொண்டு அதனை நீக்கச் சட்டவிதி. வேண்டுமென்றார். அதற்கு மேலும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் கண்காணிப்பாளர் வேண்டும், அவ்ரை விதிக்கவும் சட்டவிதி வேண்டும் என்றார்.இதனைத் தமிழ் மொழியியல் அறிஞர்கள் சற்று நினைத்தல் நலமாகும். -

ஆங்கில அறிஞர் கருத்துக்கள் எழுந்தமைக்குத் துணைத்தளமாக ஓர் ஆங்கிலச் சொல் நினைவிற்கு வருகின்றது. அது Barbaric என்னும் சொல். இச்சொல்லிற்கு முரட்டுத்தனமான, காட்டுமிராண்டியான எனப்பொருள். Barbarism என்பதற்குக் காட்டுமிராண்டிவாழ்க்கை என்னும், பொருளுடன் மற்றொரு விளக்கமான பொருளையும் ஆங்கில அகரமுதலிகளும், ஆங்கில-தமிழ் அகரமுதலிகளும் காட்டுகின்றன. அது என்ன? -

"தாய்மொழிச் சொல்லை நீக்கி அயல்மொழிச் சொல்லைப் பயன்படுத்துதல்" என்பதைக் காண்கிறோம். எனவே, தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலந்து மொழிக் கலப்படம் செய்வது ஒரு முரட்டுத்தன்மையான குற்றம், பண்புள்ள செயலன்று:நாகரீகமற்றது; என்பதை உணரலாம்.இப்படிச் சொல்வது சற்றுக் கடுமையேயாயினும் இதில் உண்மை பொதிந்திருப்பதை மறுக்க முடியாது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/37&oldid=687097" இலிருந்து மீள்விக்கப்பட்டது