பக்கம்:தமிழ்மாலை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

3

பிறமொழிச் சொற்கலப்பால் தமிழ் காலப்போக்கில் தன் சுவடின்றி அழியும் என்பதை ஒர்ந்து கண்ட அடிகளார் அவ்வாறு நேராமல் தடுக்கப் பலவகையிலும் தமிழர் முனைய வேண்டும் என்று அறிவுறுத்துபவர்,

"தமிழர் அனைவரும் பண்டுபோல் தமக்கும் தம் இல்லங்கட்கும் தம் ஊர்களுக்கும் பிறவற்றிற்குமெல்லாம் தூய தமிழ்ப்பெயர்களையே அமைத்தல் வேண்டும்” என்றார்.இது தமிழர் கைக்கொள்ள வேண்டிய இன்றியமையாதத்தமிழ்ப்பணி என்று சொல்லலாம். பெயர்களாக வடசொற்களையே கொள்வதும், தமிழில் வடசொற்களைக் கலந்து எழுதுவதும் கண்டு மனம் வெம்பினார். அவ்வெம்பலை வெளிப்படுத்தும் வாயிலாகத் தாம் தமிழரைக் கையேந்திக் கெஞ்சவேண்டும் என்னும் நிலைக்குப்போய் அவர் அறிவித்த சொற்றொடரை நோக்கின் அது அவர்தம் தனித்தமிழ் முத்திரைக்கு அரக்கு முத்திரை எனலாம்.

"தமிழ் நன்மங்கையின் அழகிய நன்மேனியில் அம்மைத் தழும்புபோல் வடசொற்களைப் புகுத்தாதீர்கள். அடியேன் உங்களைப் பெரிதும் கெஞ்சுகின்றேன். ஆண்டவர்களே! தமிழைக் கெடுக்காதீர்கள். தனித்தமிழுக்குப் பாடுபடுங்கள்"

என்றெழுதிய இவ்வுணர்வின் வடிப்பான சொற்றொடர் தனித்தமிழின், அடித்தளத்தில்குத்தப்பெற்றவைரமுத்திரை.அடிகளாரின் தமிழ்முத்திரை.

தனித்தமிழ் என்ற தொடரமைப்பு தமிழ் தனித்துவிடுவது போன்று கருதுவது ஓரளவில் இயல்பாகலாம் என்றஉணர்வு எனக்கும் உண்டு.அதுசுருதி தனித்தமிழ் என்பதற்கு மாற்றாக நிறைதமிழ் என்று குறிக்கலாம் என்று கருதினேன்.அதனால் நாகையில் மறைமலையடிகளார்க்கு நிறுவிய சிலையின் அடிக் கற்பீடத்தில் “நிறைதமிழ்ச் செம்மல் மறைமலையடிகளார்” என்று பொறிக்கச் செய்துள்ளேன். பிற சொற்கள் பல்கித் தமிழ்ச் சொற்கள் குறைபடுவதைவிடநிறைவாகத் தமிழ்ச்சொற்களே கொள்வதை நிறைதமிழ்' என்று நிறைவாகக் கொள்ளலாம்.

இத்தமிழ் முத்திரையையும் முன்னே கண்ட தமிழின் ஊற்றத்தையும் அற்றம் காக்கும் கருவிகளாகக் கொண்டு அடிகளார் சைவப்பகுத்தறிவுமுழக்கம் செய்தார். - - f :

ஈ. சைவப் பகுத்தறிவு முழக்கம் -

அடிகளார்க்குத் தமிழின ஊற்றம் நாடித் துடிப்பு: தமிழ் முழக்கம் - மூச்சோட்டம். சைவமோ ஜம்புலன்களின் உணர்வு முழக்கம் அவ்வுணர்வு

அறிவால் உந்தப்பெற்றது. அதனால்தான் ஐம்புலன்களின் உணர்வு முழக்கம், என்றேன். ஐம்பொறிகளின் உணர்வு முழக்கம்' என்று குறிக்கவில்லை. புலன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/38&oldid=687098" இலிருந்து மீள்விக்கப்பட்டது