பக்கம்:தமிழ்மாலை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

என்பது அறிவு.பொறி என்பது உறுப்புதான். அவற்றை இயக்கும் கருவி அறிவு என்னும்புலன்.அப்புலன்உணர்வைச் சென்றவிடத்தால் செல்லவிடாது; தீதை ஒருவும் நன்றின்பால் உய்க்கும்.திருவள்ளுவர் தந்த இந்த அறிவு இலக்கணம் உள்ளே ஓர் உண்மை பொதிய வைக்கப்பெற்றது. அறிவு, உணர்வை அதன் போக்கிற்கு விடாமல் கட்டுப்படுத்தும், கட்டுப்படுத்தி நன்மை எது தீமை எது என்று பகுத்துப் பார்க்கும். பகுத்துப் பார்த்த அறிவு தீதை நீங்கச் செய்யும்; பகுத்துப்பார்த்த அறிவுநன்மையில்கொண்டுசெலுத்தும்.அதனால் இவ்வறிவு பகுத்தறிவு. - r

அடிகளார் தம் ஐம்புலன் உணர்வான சைவத்தைத் தம் நூலறிவும் நுண்ணறிவும் கொண்டு பகுத்துப் பார்த்தார். அதில் கலந்த தீமைகளை ஒருவினார்நன்மைகளை உய்த்துக்கண்டுபதிவாக்கினார்.அவற்றைப்பேச்சில் முழக்கினார் எழுத்தில் எழுத்தை முழங்கச் செய்தார்.

அடிகளார் சைவத்தைத் தம் உள்ளத்தில் வைத்தார், சைவத்தில் தம்மை வைத்தார்.சைவ உலகில் தம்பெயரை நிறுத்தினார்.சைவர்களைப்பகுத்தறிவுப் பார்வைக்கு உட்படுத்தினார்.

எதையும் ஏன்? எவ்வாறு? என்று வினவும் பகுத்தறிவு வினாக்களை மிகு அழுத்தமாக வினவினார். அவரே தக்க விடையும் கண்டார். 'சிவபெருமானே முழுமுதற் கடவுள். பிற சமயங்கள் அனைத்தும் பொய்யான கருத்துக்களைக் கொண்டவை; அவை கொண்டு இறையருளைப் பெற இயலாது என்று நம்பினார் அஃது அவர் உரிமை. ஆனால் பிற சமயநூல்களில் ஏற்கத்தக்க கருத்துக்களை எடுத்துக் கொண்டார்.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் முறையே சமண, புத்த சமய நூல்களாயினும் உள்ளன உள்ளபடி கூறிய முழுக்காப்பியங்களான சிலப்பதிகாரம்,மணிமேகலை என்பனவற்றின்முன்தலையெடுத்துநிற்கும் வேறு காப்பியங்கள் இவ்வுலகில் வேறு எந்த மொழியிலேனும் உளவா? இல்லையே’ என்று மனந்திறந்து எழுதினார்.

வேற்றுமொழியாகிய பாலியிலும், வடமொழியிலும் எழுந்ததிரிபிடகம், இருக்குமுறைகளின் கருத்துக்களை ஆய்விற்குத் துணையாக எடுத்துக் கொண்டார்.

இருப்பினும் சிவபெருமானே உலகமளாவிய கடவுள் என்றார். இறைவன் என்பதை வாய்க்கும் இடந்தோறும் கொண்டு காட்டினார். உலக மக்கள் பண்டைக்காலத்தில் சிவனையே வணங்கினர் என்று அதனை அவ்வம்மொழிகளில் இறைவன் பெயர்களைக் கொண்டே அறியலாம் எனறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/39&oldid=687099" இலிருந்து மீள்விக்கப்பட்டது