பக்கம்:தமிழ்மாலை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

'எபிரேயத்தில் - dia:TGeum (yehova) கிரேக்கத்தில் - &lgoë (Jesus) உரோமத்தில் - 351sloff (Jupiter)

என்றெல்லாம் தொன்றுதொட்டு வழங்கினர்' என்று காட்டினார்.இவை சற்று வலித்து கொள்ளப்படும் கருத்தெனினும் அவர் சிவப் பற்றில் அத்துனைப் பிடிப்பாக இருந்தார் என்பதைக் காட்டுவதற்காக எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் சைவ சமயத்தில் பெருகிப்போன விண் கோட்பாடுகள், கதைகள் முதலியவற்றை இவர் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. சிலவற்றைத் தழுவி அவற்றிற்கு அமைதி கூறினார். பலவற்றை மறுத்தார்; கண்டித்தார்; சாடினார்; கடுமையாகச் சாடினார். - புராணக் கதைகளைப் பற்றிய அடித்தளக் கருத்துக்களாக இவர்

கொண்டவை இரண்டு. ஒன்று:

“இறைவன் உயிர்களுக்குச் செய்துவரும் செயற்கருஞ் செயல்களை ஆழ்ந்தறியும் நுண்ணறிவில்லாத பொதுமக்கட்கு உணர்த்தும் பொருட்டாகவே அவை தம்மைக் கதைகளாக

அமைத்து வைப்பாராயினர்"

என்பது. இஃதொன்றும் புதுமையன்று; பல சான்றோர்கள் அறிவித்ததோ

மற்றொன்று;

“பொதுமக்களை ஏமாற்றும் பொருட்டுப் பார்ப்பனரும் கோயிற் குருக்கள்மாரும் வடமொழியில் வரைந்து வைத்த பொய்யான புராணங்களையும் தலபுராணங்களையும் பெரும்பாலும்

அடியோடழித்து விட்டனர்”

என்பது. இதுபோன்ற கருத்துக்கு 16-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சில சித்தர்கள் பாடல்கள் இடம் வைத்துள்ளன என்றாலும் அவற்றை வலியுறுத்தியும் அளவையியலான மறுப்புக்கள் தந்து முதன்முதலில் மறைமலையடிகளாரே கொடிகாட்டினார்.

கடவுட்கொள்கையை ஏற்காத பெரியார் போன்றோர் புராணங்களை மறுத்ததினும் சைவப்பற்றில் நின்ற சமயியாகிய அடிகளார் மறுத்தது சமயிகளையே நினைத்துப் பார்க்க உந்தியது எனலாம்.இது கருதிய பெரியார் இவரைத்தம் வலக்கை என்றார். -

மேற்குறித்தவாறு இருவகைக் கருத்துக்களை அடிகளார் கொண்டதற்குக் காரணம் இவர் பழம்பெரும் நூல்கள்பால் கொண்ட பற்றும்

instä மேயாகும்.

தக்கன் வேள்வியை அழிக்கச் சிவபெருமான் மேற்கொண்ட கதையை ஒர் உருவமாகக் கொண்டு "வீரபத்திரன் ஓர் வீரம் செறிந்த முனிவன், அவ்வாறு அழிந்தான்" என்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/40&oldid=687100" இலிருந்து மீள்விக்கப்பட்டது