பக்கம்:தமிழ்மாலை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

பழம்பெரும் நூல்கள் காரணமாகச் சிலவற்றை ஏற்பது மக்கள் நலம் காரணமாகப் பலவற்றை மறுப்பாக்கும் இவர் தமிழுணர்வைச் சொல்லி விளக்கியுள்ளார்: : - o

“எண்ணளவில் மேற்குறிக்கப்பெற்ற கடவுள் இயல்புகளைச் சொல்வதில் (புராணம் பற்றிச் சொல்வதில்) யாம் வெறுப்புடையேனாயினும், இவைகள் குற்றமில்லாதனவாகவே எடுக்கப்படுமாயினும், தமது சமய வாழ்க்கைக்கு இவை தினைத்துணையாவது பயன்படுமென்று கருதக்கூடவில்லை என்பதைத் திறந்து சொல்கிறேன். ஆகவே, இவை (புராணங்கள்) ஒன்றும் உண்மையானவை அல்ல"

என்று உளந்தோய்ந்த உண்மையை மனந்திறந்து எழுதிவைத்தார்.

தமிழர் தம் சமய வாழ்க்கை திரிக்கப்பெற்றது என்பதற்கு உலகப் பேரறிஞர்கள், மெய்யுணர்வாளர்கள் ஆய்வுக்கருத்துக்களைமேற்கோள்களாகக் காட்டினார். அவற்றில் ஒன்றிரண்டை இங்குகாட்டுவது பொருந்தும்.அடிகளார் ஏதோ ஆரியவெறுப்பால்இக்கருத்தைக் கொள்ளவில்லை; உண்மைநிலையைக் கண்டே அறிவித்தார் என்பதற்கும் பொருந்தும் -

"ஆரியர்கள் தங்களுடைய சமயத்தையும் 3. பழக்கவழக்கங்களையும் திராவிடர்மேல் திணிக்கத் தொடங்கிய காலப்பகுதி தொன்மையான அரசுகள் குலமரபுகள் குறிக்கும்.

骷密*4世

காலகட்டம் ஆகும் - என்று காட்டிய அறிஞர் சி.மெக்லின் கருத்தையும், அமெரிக்க மெய்யுணர்வாளர்

வில்லியம் சேம்சு என்பார், .

“கடந்த நிலையைக் கூறினால் மாயாவாத ஆர்ாய்ச்சியுரைகள் சமய உண்மையினை உலகமெல்லாம் தழுவும்படி செய்ய மாட்டாதவையாய் வழுவுகின்றன"

என்று மாயாவாதத்தாரை மறுத்துக் கூறியதையும் சார்ந்து நின்று எடுத்துக் காட்டியுள்ளார். .

இவ்வாறு சமயத்தொடர்புக் கதைகளை மறுக்க முன்வந்தவர் பிற சமயங்கள் பற்றி மட்டுமன்று தாம் ஊன்றிநின்ற சைவக் கதைகளையும் இப்பார்வையிலேயே நோட்டமிட்டார். தாம் முழுமுதற் கடவுளாகக் கொண்ட சிவபெருமான் பிற முருகன், பிள்ளையார்,திருமால் ஆகிய கடவுளரைப்பற்றிய கதைகளையும் அலசினார். -

அவ்வாறு அலசும்போது அவ்வக் கதைகளின் அத்தளக் கருத்துக்களை ஏற்று வளர்த்த பொய்மைக் கற்பனைக் கருத்துக்களைத் தோலுரித்துக்காட்டிச்சாடுவதைத்தம் கொள்கையாகவே கொண்டார் எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/41&oldid=687101" இலிருந்து மீள்விக்கப்பட்டது