பக்கம்:தமிழ்மாலை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

சிவபெருமான் தக்கன் வேள்விக்கதையில் அவ்வேள்வி நிகழ்ச்சியை ஏற்றுக்கொள்ளும் அடிகளார் சிவபெருமான் தோற்றுவித்த வீரபத்திரன் கதையைப் பொய்யென்று தள்ளி வீரம் மிக்க ஒரு முனிவுன் அவ்வேள்வியை அழித்தான் என்கின்றார். -

தாம் நோய்வாய்ப்பட்டகாலத்தில் அது தீரத்திருவொற்றியூர் முருகன் மேல் மும்மணிக்கோவை பாடிப் போற்றியவர் முருகன் தன் பிறப்புக்கதைகளை ஏற்கமறுத்துக்கண்டிக்கிறார்.அளவையியல்திறத்தோடுகண்டிக்கிறார்.

‘தீக்கடவுளுக்குக் கங்கையாற்றின்பால் பிறந்த ஆறு குழந்தைகள் ஒன்றாக அணைத்தெடுத்தபோது ஒரு குழந்தையாகி ஒருடலும் ஆறு தலைகளும், பன்னிரண்டு கைகளும் கொண்ட முருகனாக விளங்கியது' என்னும் வால்மீகி இராமாயணக்கதையை மறுக்கும் திறன்குறிக்கத்தக்கது.

உயிர் அருவமானது உடல் உருவத்தது. ஒர் உடல் மற்றோருடலாகக் கூடும். உயிர் மற்றோர் உயிராகவோ மற்றொரு உயிருடன் இணைவதாகவோ இயலாத இயல்புகொண்டது.ஆறுகுழந்தைகளின் உடல்கள் ஒர் உடலாகக்கூட அவற்றின் தனித்தனி ஆறு உயிர்களில் ஒன்றுதானே அவ்விணைப்பு:உடலில் இடம்பெறும்.மற்றை ஆறு உயிர்கள் என்னவாயின? என்று வினவிமறுக்கிற திறன் அளவையியலைநினைவுறுத்துகின்றன. - இதுபோன்றிேபிள்ளையார் பிறப்பில் பலவகைக் கதைகளையும் ஆய்ந்து அவையாவும் பொய்மூட்டைகள் மட்டுமன்றி இறைவன் இறைவியரைத்தாழ்வு படுத்தும்நிலைகொண்டவை என்று தள்ளுகின்றார்.

வைணவச்சமயத்தை ஒரளவில் இசைந்து கொள்கின்றவர்,திருமாலின் பத்துத்தோற்றரவுகளை மறுத்துவிடுகின்றார்.இக்கதைகள் எல்லாம்,

"ஆராய்ச்சி அறிவில்லாத கயவன் எவனோ ஒருவன் கட்டிவிட்டனன்" -

என்றுமுருகன் பிறப்புபற்றிக் கூறியதை அனைத்திற்கும் கொள்ள வேண்டும்.

இங்கே ஒருநிகழ்ச்சியைச்சொல்லிக்காட்டவேண்டும். - பாளையங்கோட்டையில் ஒரு கூட்டத்திற்கு அடிகளார் அழைக்கப் பெற்றிருந்தார்.சைவசமயத் தொடர்பான பேச்சு.சில கூட்டங்களில் அடிகளார் தாம் விரும்பாத கம்பராமாயணம் பற்றிக் குறைகள் கூறுவதுண்டு. சில், வேளைகளில் அக்குறை மலிவான நகைச்சுவையாகவும் அமைந்ததுண்டு. பாளைக் கூட்டத்தில் அது இப்படி அமைந்தது. இராவணன் பத்துத் தலைகளை உடையவன் என்று இராமாயணம் கூறுகின்றது. கம்பரும் அவ்வாறே எழுதியுள்ளார். அவ்வாறாயின் இராவணன் படுக்கும்போது ஒருக்கணித்துப் படுத்தானா? இயலாதே! எப்போதும் மல்லாந்தே படுத்திருப்பானோ?" என்று பேசினார். - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/42&oldid=687102" இலிருந்து மீள்விக்கப்பட்டது