பக்கம்:தமிழ்மாலை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 மாலை ஞாயிற்றின் செக்கச் சிவந்த

செஞ்ஞாயிற்றின் நிறம் சிவனின் செம்மைநிறம் செஞ்ஞாயிற்றைச் சூழ்ந்த காவிநிற

முகிற்குழாம் : சிவந்த சடைக்கற்றை முகிற்குழாமிடையே தோன்றும்

பிறைத்திங்களே : சிவன் முடியிற் பிறை முகிற்குழாத்தில் தோய்ந்த

நீராவி ; கங்கை நீர்?

இவ்வாறு சிவனை நம் கண்முன்னே காட்டி மகிழ்கிறார்.

இதற்கு -

“அருக்கன் (கதிரவன்) பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கண் ஆவான் அரன்உரு அல்லனோ' - என்னும் அப்பரடிகள் பாடலையும் சான்றாக்கியுள்ளார்.

வடமொழிப் பாடலாகிய, “குர்யோமுக்ய சரீரத்து சிவஃச்ய பரமாத்மா” என்பதையும் சான்றாக்கியுள்ளார். மேலும் செங்கோன் தரைச்செலவு என்னும் பண்டைநூலின் முகப்பில் ஞாயிற்றுவணக்கத்தை வைத்திருப்பதைக் காட்டுகின்றார். ஆண்ால் இளங்கோவடிகள் பாடிய "ஞாயிறு போற்றதும்; ஞாயிறு போற்றுதும்" என்பதை அது சமண சமயம் என்று கருதாதுபோயினும் நாம் இணைத்துப் பார்த்துக் கொள்வோம் என்று விடுத்தார் போலும். அல்லது 'ஞாயிறு போற்றதும்" என்பதற்கு முன்னர் திங்களைப்போற்றுதும் என்றதை எண்ணிச் சொல்ல விடுத்தார் எனலாம். எவ்வாறாயினும் உலகத் தோற்றம் ஞாயிற்றின் மூலம் என்னும் அறிவியல் கோட்பாட்டில் இவ்வண்ணனைகள் ஒத்துநின்று சைவத்தில் பகுத்தறிவை முழங்குகின்றன.

சமுதாயச் சீர்திருத்தத்திற்கும் ப்குத்தறிவுச் செயற்பாட்டிற்கும் முதற்பணி சாதி ஒழிப்புதான்."பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் முதலாகச் "சாதிகள் இல்லையடி பாப்பா' வரை சாதிப்பேய் ஒடியபாடில்லை. இடையில் சைவச்சான்றோர் மனந்திறந்து பாடியபோதெல்லாம் இதனைத் தொட்டுக் குட்டியும் பாடினர். கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்” என்ற அப்பரடிகள் மேலும் அழுத்தமாகவும் பாடினார். "ஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் யாம் வணங்கும் கடவுளார்" என்று புலைத் தொழில் செய்தவரைத் தீண்டத்தகாதவராக்கிய கொடுமையை எண்ணி அவரையும் சைவம் உயர்த்தும் என்றார். தேவார மூவர் மணிவாசகர், 15-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சித்தர்கள் குறிப்பாக்வும் ஏறிப்பாகவும் கண்டித்தனர். சாடினர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/46&oldid=687106" இலிருந்து மீள்விக்கப்பட்டது