பக்கம்:தமிழ்மாலை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மேலே காணப்பட்ட சைவத்தார் சாதி ஒழிப்பு பறறிப் பாடிய பாடல்கள் இக்காலத்தில் பரவலாக எல்லோராலும் பேசப்படுகின்றன எழுதப்படுகின்றன. இதில் என்ன மறைமலையடிகளார் பகுத்தறிவு இருக்கிறது என்ற எண்ணம் முனைப்பது இயற்கை இவ்வாறு பரவியுள்ள கருத்துக்கள் பலவற்றை முதன்முதலில் கண்டு வெளியிட்டவர் அடிகளாரே. அதற்கு முன்னரும் இப்பாடல்கள் இருந்தன. தமிழறிஞர், சைவர், படித்தவர், ஆனால் எவ்வுணர்வாலோ உள்ளே கிள்ளிய அச்சத்தாலோ நமக்கேன் என்று வெளிச்சொல்லாது விடுத்தனர். துணிந்து குரல்கொடுத்தவர், எழுத்தில் தீட்டியவர் அடிகளாரே. இவற்றை வெறும் வெளிப்பாடுகளாகத் தரவில்லை. ஆய்வுச் செறிவுடன் கண்டு வெளியிட்டார்.

ஆய்வு வெளிப்பாடுகள் பலப்பல என்றாலும் இங்கு சான்றுக்கு ஒன்றைக் குறிக்கலாம்.

சென்னையில் தமிழர் நாகரீகம் என்றொரு பொழிவைத் தந்தார். அதனை இலங்கையிலும் பேசினார். இரு நகரத்தினரும் இதனை நூலாக்க வேண்டும் என்று தூண்டினர்.விரித்து எழுதினார்.எழுதியவர் முதலில் தமிழர் நாகரீகம் என்னும் தலைப்பில் வெளியிட்டு அடுத்த பதிப்பை வேளாளர் நாகரீகம்' என்னும் தலைப்பு மாற்றத்தில் வெளியிட்டார். இஃதொரு அரிய மாற்றம்.

"தமிழர் உழுதொழிலை முதன்மையாக வைத்தும், வணிகத்தை அடுத்த பணியாக வைத்தும் பணியாற்றினால் செழிப்பான

$ళీ

வாழ்வைப் பெறுவர் என்று எழுதிய உலக நாகரீகத் தொட்டிலின் முதல் உழவுக் குழந்தை தமிழ்க் குழந்தைதான் என்பதுஇவர் முடிவு. எனவே, தமிழர் என்பார்வேனில்மண்ணில் தொழில் செய்த வேள் ஆளர் வேளாளரே. அது தொழிலால் வந்த பெயர். அவ்வேளாளர் பணியாக வாணிகம் செய்து வாணிக வேளாளராயினர். நிகண்டுகள் வாணிகர்க்கும் வேளாளர் என்னும் பெயரைக் காட்டுவதை நாம் அறியலாம். ஆட்சிப் பொறுப்பேற்றோர் மன்னன், அரசன், வேந்தன் எனப்பட்டனர். வேளாளருள் துறவுபூண்டோபூணாமலோ நூல்களை யாத்தவர் அந்தணர் எனப்பட்டனர். எனவே, அனைவரும் வேளாளரே. இவர்கட்குள் சாதியில்லை. சாதி வேற்றுமையும் இல்லை. செய்தொழில் வேற்றுமையால் சிறப்புகள் சேர்ந்தன.

ஆனால் வடவர் நூல்களே பார்ப்பனர், அரசர் வணிகர் வேளாளர் என்பவற்றைச் சாதிகளாகப் பிரித்து உயர்வு தாழ்வு கற்பித்தன. நூல்களில் எழுதவும் சொற்களைச் செருகவும் செய்தனர் என்று எடுத்துக்காட்டினார் அடிகளாா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/47&oldid=687107" இலிருந்து மீள்விக்கப்பட்டது