பக்கம்:தமிழ்மாலை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

பதிந்தார். பேச்சின் திறத்தாலும் எழுத்தின் திறத்தாலும் விளக்கம பெற்றவரே அடிகளார்.நா பேசியது: கை எழுதியது. பேசி எழுதி அரும் தமிழ் மலையாக ஓங்கியது.எனவே, நாகை அவர்தம் மாணிக்கச் சுருக்கம் எனலாம்.

அச்சுருக்கத்தை விரித்து இன்று உங்கள் முன்வைக்கிறேன்.

ஆ.நாவால் மலை

நாகையில் நா தான் முதலில் நிற்கிறது. அடிகளார் திறனும் முதலில் நாவால்தான் வெளிப்பட்டது. “யா நலத்து உள்ளது உம்' என்றாகிய நாநலம் என்னும் நலனுடைமை அடிகளார்க்குத் தனியுடைமையாக அமைந்தது. பைந்தமிழை, வடமொழியை, ஆங்கிலத்தை உணர்ந்து கற்று அறிவைப் பெருக்கிக்கொண்டவர் அதனை உலகோர்க்கு வழங்கத் தொடங்கியது முதலில் சொற்பொழிவால்தான்.அதுதான் உடன்பதியும் என்று கருதியவர்.தாமே"இந்து மதாபிமான சங்கம் என்று ஒன்றைத் தோற்றுவித்து அதில் கிழமைதோறும் அன்பர்களைக் கூட்டி சொற்பொழிவாற்றித்தம் கருத்துக்களை விளக்கினார். திரு. மதுரை நாயகம் அவர்கள் நாகை வெளிப்பாளையத்தில் சைவ சித்தாந்த சபையை நிறுவினார். அதில் அவ்வப்போது இளைஞரான வேதாசலத்தை வைத்துச் சைவ சமய, சித்தாந்தச் சொற்பொழிவுகள் ஆற்றவைத்தார். நாகை வாழ்க்கை மாறிச் சென்னை வாழ்க்கை அமைந்ததும் அங்கு தொடங்கி அடிகளார் முழக்கம் தமிழ் நாடெங்கனும் பரவியது. அவரை அழைத்துச் சைவமும், தமிழும் கேட்பதில் கற்றோர்க்கும், ஆர்வலர்க்கும்பேரார்வம் இருந்தது.

தமிழ்நாடளாவிய பொழிவுகள் வடபுலத்துநகர்களிலும்,இலங்கையிலும் முழக்கமாயின. கீழைநாடுகளுக்கும், ஒரோமுறை மேலைநாட்டிற்கும் அழைத்தனர். எழுத்துப்பணி, உள்நாட்டுப் பொழிவுப் பணி இவற்றுடன் அவர் மேற்கொண்ட பதிப்புப் பணியுடன் அவர் வகுத்துக்கொண்ட வாழ்வியல் முறைகள் வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொள்ளத் தடையாயின.

பொழிவுகளில் பலநூல்களாக வந்தன.நூற்பணிக்கு இவர்தம் பொழிவு பெருந்துணையாக அமைந்தது. இவர்தம் வாழ்வுக்காலத்தில் சைவசமயச் சொற்பொழிவில் இவர் முடிசூடாமன்னராகவே விளங்கினார் எனலாம்.

நாகைச் சொற்பொழிவு நிகழ்ச்சி-அமைப்பு தவிர மற்றவையெல்லாம் பையப்பையச் சற்று இறுக்கமாகவும் அதே நேரத்தில் பொழிவுத் துறைக்குத் தனிப்பெருமை சேர்ப்பதாகவும் அமைந்தமை மிகக் குறிக்கத்தக்கது. அவர் தனித்தமிழ்த்தந்தை' என்று போற்றப்பெற்றதுபோன்று சொற்பொழிவுத்தந்தை என்றும் கருதப்பட்டார். பொழிவிற்கு அழைப்போர்க்கு இவர் தரும் முன் அறிவிப்புகள் ஏற்பாடுகளுக்கும் தமக்கும் பெரும் வரையறுப்பாகவே அமைந்தன. அவை படிப்படியாகக் குறிக்கத்தக்கன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/51&oldid=687111" இலிருந்து மீள்விக்கப்பட்டது