பக்கம்:தமிழ்மாலை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

அவள் தேவரடியாராக இருந்தாலும், ஒரு பெருவங்கியம் ஊதுபவர் எவராக இருந்தாலும் 5001000 என்ற கொடுத்து ஆடவும் ஊதவும் கேட்கும் மக்கள் தமிழ், சைவத்திற்கு ஒரு தொகை கொடுப்பதை எண்ணிக்கவல்கிறார்கள் என்றால், நான் ஆடப்பழகாமல் ஊதப்பழகாமல் இந்தப்பாழும் தமிழ் படித்த பாவத்திற்காக ஒரு தொகை பெறுவது கூடாதவனாகின்றேனா? அந்தோ பாழுந் தமிழே! பாவச் சைவமே! என்பதன்றி வேறு என்ன சொல்வது' என்றார்.

கேட்ட முத்தமிழ்க் காவலர் தம்மையும் அறியாமல் அவற்றிற்கு விடையளித்தார். தாரை தாரையாக முத்தமிழ்க் காவலர் கண்களிலிருந்து சில மணித்துளிகள் வடிந்த “கண்ணிரே உரிய விடையும் ஆயிற்று; அடிகளார்பால்மன்னிப்பு கேட்பதாகவும் ஆயிற்று”என்று உரைப்பார் முத்தமிழ்க்

ö{T6U6UT。 -

அடிகளாரின் இந்த முறை அவருக்கு மட்டுமன்று தமிழ்ச் சொற்பொழிவாளர் உலகிற்கே ஒரு தனியான மதிப்பை உயர்த்தி நிறுத்தியது எனலாம்.

மேடைப் பந்தா என்பர். அதனை அடிகளார் மேடைப் பாங்காக ஆக்கினார். அடிகளார் இயல்பாகவே கொண்டிருந்த முறைகள் மேடைக்கு இலக்கணம் வகுக்கும் மேடைப்பாங்காயின. அத்துடன், தான் பெறும் தொகை கொண்டு தன் வாழ்க்கையை நிகழ்த்த வேண்டியிருந்தது என்பதற்று; தம் ஆய்விற்கு மும்மொழியில் வரும் நூல்களை வாங்குவதற்கே பெரும் பொருள் ஈடுகட்டப்பட்ட வேண்டிவந்தது.இவ்வாறு பொழிவில் தொகுத்த தொகைகளை நூல்களாகத் தொகுத்து அடிகளார் ஒப்புரவாற்றும் செல்வமாக அதனை ஆக்க அவர்தம் மணி மொழி நூலகத்தைப் பொதுமக்கள் இன்றும் பயன்படுத்தும் பொது நூலகமாக்கிய பெருந்தகவை என்றும் போற்ற வேண்டும். இப்பெருந்தகையாளர் சேர்த்த திரு. அறிவு மருந்தாகித் தப்பா மரமாக நிற்கின்றது மறைமலையடிகளார்நூலகம் என்னும் பெயரில்

அடிகளார்.பால் இயல்பாக அமைந்தவையும் இவர் புனைந்து கொண்டவையும் மேடையில் திகழத்துணையாயின.தோற்றத்தை மெருகிட்டுக் காட்டும் பொன்னிற உடம்பும், வட்ட முகமும் எழுந்து நின்றால் எடுப்பான தோற்றமும் அகவையின் நடுப்பருவத்தில் காவி அணிந்து முக்காடிட்டுக் கொண்ட தோற்றமும் மேடையில் இவரைக் காண்போர்க்கு ஒரு பணிவு உணர்வைத் தந்தன. அடுத்துப் பெருந் துணையாக ஒலித்தது இவரது இனிய குரல். ஒரளவு மிடுக்கா ஆனால், சற்று தணிந்த கீச்சுக்குரலில் இவர் பொழிவைத் தொடங்கியதும் அவையில் ஒரு கவர்ச்சிக்காற்று தவழத் தொடங்கும். இதனை நினைவுகூறும் கவியோகி சுத்தானந்த பாரதியார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/53&oldid=687113" இலிருந்து மீள்விக்கப்பட்டது