பக்கம்:தமிழ்மாலை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

நிரந்தினிது சொன்னவர் சில சொல்லத் தேறியவர்; மலர்க்கொத்தாய் வாய் மலர்ந்து பொருள் நறுமணம் கமழச் செய்தவர். கற்றார்முன்கற்ற செலச்சொல்லியவர்; வகுத்தும் விரித்தும் தொகுத்தும் பொழிந்தவர்; அனையஞ்சா மாற்றம் கொடுத்தவர் மொத்தத்தில் தமிழின் தொகையறிந்த தூய்மையவர்.

இவற்றில் உள்ள ஒவ்வொன்றிற்கும் இவர்தம் மேடை வாழ்விலிருந்து பலப்பல சான்றுகளைக் கூற ஏடு நீளும்,

தூய தமிழில் பேசினார் சைவ நெறியில் பொழிந்தார் மும்மொழியிலும் மேற்கோள்கள் அடுத்தடுத்தமைத்தார்; சொற்போரிடவும் தயங்காமல் முன்வந்தார். -

கரந்தைத் தமிழ்ச்சங்கத் தலைமையுரையில் பண்டிதமணியவர்கள் மன்றத்திலிருந்தும் அடிகளார் மேடையிலிருந்தும் தடைவிடையாக மோதிக் கொண்ட நிகழ்ச்சி இவர்தம் சொற்போர் முறைக்குப் பெருவெற்றி எனலாம். வள்ளலார் இராமலிங்கர் அருட்பாவை மறுத்து அது மருட்யா என்று போருக்கு வந்த தமிழறிஞர் கதிரைவேற்பிள்ளையுடன் காஞ்சியிலும் சென்னையிலும் அடிகளார் வழங்கிய சொற்போர் அக்காலத்தில் நாடறிந்த சொற்களப்போர். அதன் வெற்றியைக் கொடியாக்கிப் பிடித்தவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள். அதற்குமுன் தமிழறிஞர் கதிரைவேற் பிள்ளையுடன் ஒத்துநின்று வள்ளலாரைக் குறை கூறிய திரு.வி.க. அவர்கள் இச்சொற்போருக்குப்பின்னர் வள்ளலாரைப் போற்றத் தொடங்கினார். அருட்யா பற்றித் தனி நூலொன்றை எழுதி வெளியிட்டு வெற்றிக் கொடியில் மறைமலையடிகளாரைப் பொறித்தார். என்று நாம் பொறிக்கலாம்.

வைரக் கல்வெட்டு

அடிகளாரின் அளவையியல் திறனமைந்தபொழிவிற்கு வைர எழுத்துக் கல்வெட்டாக அடிகளாரின் இந்தி எதிர்ப்புப் பொழிவு அமைந்தது குறிப்பிடத் தக்கது. சென்னையில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குத் தலைமையேற்றுப் பெரியார் ஈ.வே.ரா.,தமிழ்த்தென்றல் திரு.வி.க.,அறிஞர் பெருந்தகைஅண்ணா, முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம், பாவேந்தர் பாரதிதாசனார் முதலானோர் புடை சூழ முழங்கிய முழக்கச் சொற்பொழிவு இந்தி கட்டாயம் எனும் பகைவர்க்குத் தோல்வியைத் தந்து தமிழர்க்குப் பெருவெற்றி தந்தது.

அடிகளாரின் சொற்பொழிவு வரலாற்றில்இந்த இந்தி எதிர்ப்புமாநாட்டுப் பொழிவிற்குத் தனித்த இடமும் ஒரு பெரும் புரட்சிமுத்திரையும் உண்டு. அஃது என்னவென்றால், சொற்பொழிவு என்றால் ஏற்பாட்டு அறிவிப்புகளும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/56&oldid=687116" இலிருந்து மீள்விக்கப்பட்டது