பக்கம்:தமிழ்மாலை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

வரையறைகளும் குறிப்பிட்ட தொகையும் இடம்பெற்றுவந்த அடிகளார் பொழிவு

வரலாற்றில் இம்மாநாட்டுப் பேச்சிற்கு அழைப்பில்லாமல், ஏற்பாட்டுக் -

கண்டிப்புகள் இல்லாமல், குறிப்பாகத் தொகை கேட்டு வாங்காமல் சென்று முழங்கியமை சொற்பொழிவு வரலாற்றில் மாறுபட்ட முத்திரை மட்டுமன்று அடிகளாரின் தமிழுணர்வும்,தமிழின ஊற்றமும் செறிந்த வெளிப்பாடும் ஆகும்.

அடிகளார்க்குச் சொற்பொழிவில் உந்துதல் நேர்ந்தது மற்றொருவர் சொற்பொழிவால்தான். சென்னைச் சூளையில் வாழ்ந்த சைவத்திரு சோமசுந்தர நாயகர் சைவ சித்தாந்தத்தில் வல்லவர் தேர்ந்த திறனாளர் சொற்பொழிவாற்றுவதில் புயல் எனப்படும்"வைதிக சித்தாந்த சண்டமாருதம்' என்னும் பட்டம் பெற்றவர். இராமநாதபுரம் மாண்பமை பாஃச்கர சேதுபதி அவர்கள் கூட்டிய அனைத்துமதமாநாட்டில் சைவ சமயம்பற்றிப்பேசி வென்றவர்.

அம்மன்னரால் பட்டமும் தோடா என்னும் வெற்றிச்சின்னமாகிய பொன்காப்பு

இரு கைகளுக்கும் அணிவிக்கப்பெற்றவர்.

அவர் நாகையில் சைவ சித்தாந்த சபைக்கும், கோவிலுக்கும் பேச

வருவார். அவர் சொற்பொழிவே அடிகளாரைச் சொற்பொழிவு உலகத்திற்கு அழைத்தது. அதுமட்டுமன்றி அதற்கு முன் தாம் விரும்பிக் கற்ற வேதங்களில் மனம் ஈர்ப்புண்டிருந்த இளைஞர் வேதாசலம் அவ்வேதம், வேதாந்தம், வேதம் காட்டும் மாயாவாதம் பற்றிய கருத்துக்களையே வற்புறுத்திப் பேசி வந்தார்.

சைவத்திரு நாயகரின் சொற்பொழிவால்தான் இவர் மனம் மாறிச் சைவ

சித்தாந்தத்தில் ஊன்றினார்.நாயகர் போன்று சொற்பொழிவாற்றவேண்டும் என்னும் முனைப்பும் கொண்டார். சில கூட்டங்களில் அவர்தம்முறைகளையே

கடைப்பிடித்துப் பேசியவர் பின்னர் தமக்கெனத் தன் முறைகளை வகுத்துக் கொண்டார். - - -

சொற்பொழிவில் ஈர்ப்புண்டு சொற்பொழிவாளரான அடிகளார் சொற்பொழிவாளர்களைப் போற்றவும் செய்தார். உண்மைத் திறமான சொற்பொழிவு வழங்குவாரைப் பாராட்டியதும் உண்டு அளவிற்கதிகமாகப் பாராட்டாதஇவர் ஒருமுறை அவ்வாறும்பாராட்டினார்.கடலூரில்ஞானியாரடிகள் மடத்தில் அவ்வடிகளாரால் நிகழ்த்தப்பெற்ற சைவ சமய மாநாட்டில் இவர் தலைமையில் பலர் பேசினர். தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்சா திருஞானசம்பந்தர் பற்றி விரிவாகவும் பொலிவாகவும் பொழிந்தார். முடிவுரையில் அடிகளார் திரு.வி.க. அவர்களைத் "திருஞானசம்பந்தர் பற்றி இத்துணை திறமாகப் பேசிய இவரை யாம் ஒரு தெய்வமாகவே கொள்கின்றோம்" என்று மனந்திறந்து பாராட்டினார். இப்பாராட்டு அடிகளார் சிறந்த சொற்பொழிவைச் சுவைப்பார்-மதிப்பார் என்பது மட்டுமன்று "வ்ையத்து வாழ்வாங்கு வாழ்ந்த திரு.வி.க. அவர்களைத் தெய்வத்துள் வைத்தலும் தகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/57&oldid=687117" இலிருந்து மீள்விக்கப்பட்டது