பக்கம்:தமிழ்மாலை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

அடிகளார்தம் சொற்பொழிவை மற்றவர் ஏற்பாடுசெய்து பேசத்துவக்கிய இடம்நாகைவெளிப்பாளையத்துச்சைவசித்தாந்தசபை அன்றோ?தொடர்ந்து இவர் பல்லிடங்களிலும் மாநாடுகளிலும் ஆண்டு விழாக்களிலும் உரையாற்றினார்.விழாவினர் மிகச்சிறப்புடன் வரவேற்றுப்பெருமை தந்தனர். ஆயினும்தாம் இளைஞரர்கப்பேசத்துவங்கியநாகையில் அச்சைவசித்தாந்த சபை பெருமைப்படுத்தியது.இவர் சொற்பொழிவு வரலாற்றில் ஒரும்ங்கலமான 1 பதிவு எனலாம். - -

நாகை மக்கள் அச்சபையின் ஆண்டுவிழாவிற்கு அழைத்து அச்சபை அமைந்த தெரு முனையிலிருந்து பந்தரிட்டு, பெருவங்கியம் முழங்கவரவேற்று. நடந்து செல்ல பட்டால் நடைபாவாடை விரித்து நடத்திச்சென்று அளித்த பெருஞ்சிறப்பு மடியில் ஏந்திய தாயே முடிசூட்டி மகிழும் பெருஞ்சிறப்பாக அமைந்தது. உள்ளூர் மேளம்உயர்த்தப்படாது என்றொருகுறைசொல்வார்கள். அதற்கு மாறாகப் பிறந்த ஊரிலே அடிகளார் குறிப்பிடத்தக்க பெருஞ்சிறப்பு பெற்றமை தமிழுக்கும் சைவத்திற்கும் தனிச்சிறப்பை மலர்த்திய தகவிற்குதந்த பெருமதிப்பாகும். - -

மேடையில் பெருஞ்சிறப்பிலேயே வளர்ந்த அடிகளார் மேடையில் சில வேளைகளில் சில குறைபாடுகளைக் கொண்டு அவற்றில் கருத்து மாறுபாடு காரணமாக நேர்ந்தவற்றை மனமுவந்து ஏற்றுச் சில நேரங்களில் அவற்றைப் போற்றத்தக்க மறுமொழிகள் தந்துவென்றார்.அமைதியாகச் சான்றுகள் காட்டி மறுப்பதும் விளக்குவதும் இவர்தம் மேடைப் பண்பு மிகச்சில குறிப்பிடத்தக்க இடைநிகழ்ச்சிகள் நேரும்போது சற்று உணர்ச்சிவயப்ப்ட்டுக்குரலைச்சற்றே உயர்த்தி மறுப்பதும் உண்டு. சினந்தோ கடிந்தோ பேசியதில்லை.

கருத்துக்களை மறுத்து அல்லது விளக்கங்கேட்டு எதிர்க்குரல்களை எதிர்கொண்டிருக்கிறார். ஆனால், இவரைப் பற்றித் தனித்த முறையில் குறை பேசிய ஒரிருநிகழ்ச்சிகளில் இவர் நடந்துகொண்டமுறைஇவரது பெருந்தகவுக் குணத்தை வெளிப்படுத்தியதாகும். ஒன்றைக்குறிக்கலாம்

மலிவான நகைச்சுவை

தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்து ஆண்டுவிழாத்தலைமையே ற்ற போது ஒரு புலவர் பேசினார். அவர் ஏதோ சற்று வெறுப்புணர்ச்சி கொண்டவர் போலும் அவர் அடிகளாரது ஒப்பனை அமைப்பைக் கிண்டல் செய்வதுபோன்று பேசினார். துறவியாகப் பெயர் சூட்டிக்கொண்டு காவி ஆடையணிந்து காட்சி தரும் மறைமலையார் தம் குடுமியைத் தற்கால ஆங்கிலமுன்றயில் பின்வெட்டு

பொருந்தாது” என்று மேடை நாகரீகமில்லாது வெளிப்படையாகவே கண்டிப்பதுபோல் பேசினார்.அடிகளார் அவரை ஒரக்கண்ண ால் பார்த்துவிட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/58&oldid=687118" இலிருந்து மீள்விக்கப்பட்டது