பக்கம்:தமிழ்மாலை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

6

இவர் கையெழுத்தின் உருவம்மணிமணியானதா:முத்துமுத்தானதா என்று வியந்து காணும் அளவிற்கு அழகானது.முதல் பக்கத்தில் முதல் வரியில் அமைந்த அழகிலேயே இறுதிப்பக்கத்து இறுதி வரியிலும் எழுத்துக்கள் அழகிழக்காமல் அமைந்திருக்கும். மேற்சொன்ன கவனத்தில் எழுதப்பெறுவதால் அடித்தும் திருத்தியும் எழுதப்படவில்லை. செய்திகளுக்கேற்பப் பத்திகள் பிரித்தும் நிறுத்துக்குறிகள் இட்டும் எழுதுவார். நீண்ட தொடர்கள் பொருள் பொருத்தம்மாறாமல் ஆற்றொழுக்காக நம்மை அழைத்துச் செல்லும். . ." இவர் தம் உரைநடையில் அருஞ்சொற்கள் இடம்பெற்றன. 'அன்னோ' (ஐயோ),படுகர் (பள்ளம்),தனிமம் (படுக்கை) முதலியமிகச்சில சொற்கள் இடம் பெற்றுள்ளன. இச்சொற்களையும் அணுகித் தேடி எடுத்துக் காட்டியுள்ளேன் எனில் இவை மிகமிக அருகியவை என்றுணரலாம். பொருட்டோற்றங்களில் போன்ற அரிய புணர்மொழிகள் எழுதப்பட்டவையும் மிகச் சிலவே. கடைப்பிடிப்பாயாக என்பதைக் கடைப்பிடிக்க என்று சுருக்கம் கருதி எழுதியுள்ளார். அவையிற்றை (அவற்றை) என்றெழுதுவதும் பின்னர் விடுபட்டது.

'யாது’ என்னும் மூலச்சொல் போன்றவற்றை இவர் எழுதியது அச் சொல்லாட்சிமறையக்கூடாது என்பற்காக

முற்கால உரையாசிரியர் தம் உரைகளைத் தம் மாணவருக்குப் பாடம் சொல்லும் பாங்கில் எழுதினர். இடையிடையே மாணவர் ஐயம் வினாவுவதும், ஆசிரியர் விடை விளக்கம் தருவதும் போன்ற உத்தி கையாளப்பெற்றது. அது போன்றே அடிகளாரும் அற்றன்று என்றும் எனின் நன்று என்றும் எழுதியதுண்டு. இவையெல்லாம் இவர் நாகப்பட்டினத்தில் வாழ்ந்தபோது தொன்மை இலக்கியங்களிலும், உரைகளிலும் ஊன்றியிருந்தநிலையில், காலம் செல்லச் செல்ல இவை மறைந்தன எனலாம்.

இவர்தம் சொற்றொடர்கள் நீளமானவை. ஆனால் ஆற்றொழுக்கானவை. சில தொடர்கள் 60,70சொற்களையும் கொண்டிருக்கும். பதிப்பில் அமையும் பத்திகள் 3, 4 பக்க அளவில் அமைந்ததும் உண்டு. இவையெல்லாம் எடுத்துக்கொண்ட பொருள் தொடர்பால் அமைந்தவை.

இவற்றை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு 'மறைமலையடிகளார் தமிழ் கடுமையானது என்றால் அவர் தந்துள்ள புத்துணர்வுக் கருத்துக்களை ஏற்க மறப்பவர்கள் ஏற்றிய பழிச்சொல். -

சொல்லாட்சி

ஆனால் இவர்தம் சொல்லாட்சியில் புத்தமைப்புகள் இருந்தன. நீர் தேக்கப்பெற்று மதகுவழி அதன் வாயிலிருந்து வெளிவந்து கால்போல் நீண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/63&oldid=687123" இலிருந்து மீள்விக்கப்பட்டது