பக்கம்:தமிழ்மாலை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

ஒடும்நீரோட்டத்தை வாய்க்கால்'என்போம்.மலைமீது சமதளத்தில் இவ்வாறு ஒடிவரும் நீரோட்டத்தை ஒடுகால் என்னும் சொல்லுருவாக்கி எழுதினார். நம்பிக்கை என்னும் சொல் நம்பும் செயல் அல்லது நம்பும் ஒழுக்கம்’ என்னும் பொருள் தருவது. ஆனால், அதன் புணர்ச்சி ஒவ்வாதது. இது கருதிய அடிகளார் நம்பகம் என்னும் சொல்லை உருவாக்கி எழுதினார். “மலைமுகடு, மலைக்குவடு", "பொற்றை மலை" என்றெல்லாம் எழுதுபவரே "மொழுக்கலான கருங்கற்பாறை" என்று:மொழுக்கன்"என்னும் வழக்குச் சொல்லையும் கையாண்டார்.

தம் தமிழ்நடை பற்றி அடிகளார் தாமே சீர்தூக்கிப் பார்த்துள்ளார். அதில் சற்றுக் கடுமை இருப்பதை உணர்ந்துள்ளார். எளிமைப்படுத்த வேண்டும் என்ற உள்ளெண்ணத்தில் மனம் பற்றியிருக்கிறார்.இதனை அவரே,

"ஏகினான் என்பதைப் போயினான் என்றும், வம்மின் என்பதை வாருங்கள் என்றும் எழுதக் கற்றுக் கொண்டேன். கற்றவர் கல்லாதவர் ஆகியவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காகவே அப்படி எழுதினேன்” என்று மனத்திறந்து எழுதக் கற்றுக் கொண்டேன்”

என்று குறித்தார்.

ஆனாலும்,இவர்நடைக்குக்கடினம் என்றொரு பெயர்சூட்டப்பெற்றதை

வைத்து அவர்க்குமாற்றாராயினார்,பின்னர் அடிகளார்மாறியவற்றைவிடுத்துப் பழங்கதையே பேசினர்.

புலமைச் சான்றோரும், தமிழறிஞர்களும், தமிழ்மொழி தகவை நாடுவோரும், தமிழ் மரபைக் காக்க விழைந்தோரும் அடிகளார் தமிழ்நடையைப் போற்றினர் விரும்பிப்படித்தனர்:தாமும்கையாண்டனர்; கையாளச் செய்தனர். இவர்தம் உரைநடைத்திறத்தில் மனம் ஊன்றிய பரிதிமாற்கலைஞர்,"உரைநடை கைவந்த வல்லாளர்” என்று புகழ்ந்து எழுதினார். இதிலும் வல்லாளர் என்றதற்கு வன்மை உடையவர் என்று பொருள். கொண்டுவிடாது திறமையுடையவர் என்னும் உட்பொருளைக் கருத வேண்டும். அடிகளாரின் ஆசிரியர் சைவத்திரு. சோமசுந்தரநாயகர் அவர்கள்,

"உன் தனித்தமிழைப் படிக்கப் படிக்க என் செவிகளுக்கு இன்பமாயிருக்கிறது. தனித்தமிழில் எழுதுவதை விடாதே. நீ தனித்தமிழில் எழுதுவது எனக்கு விழிப்பையும், கிளர்ச்சியையும் உண்டுபண்ணுகிறது’’’ என்று பாராட்டி ஊக்கினார்.வடமொழிச் சொற்களை மிகக் கலந்தே எழுதிய நாயகரவர்கள் தனித்தமிழ் நடையில் கவர்ச்சி கொண்டது அடிகளாரின் தமிழ் நலங்கருதியதையே குறிக்கும். திறஞ்சார்ந்த ஆசிரிரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/64&oldid=687124" இலிருந்து மீள்விக்கப்பட்டது