பக்கம்:தமிழ்மாலை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சொற்பொழிவாளருமான ஒரு சான்றோர், தமக்கு "விழிப்பை உண்டுபண்ணுகிறது”என்றும்"கிளர்ச்சியை உண்டுபண்ணுகிறது”என்றும் குறிக்கும் அளவிற்கு அடிகளார் மொழிநடை சிறப்புற்றது. இதனால்தான் பேராசிரியர் அ.சிதம்பரநாதனார்,"நாட்டின் மறைமலையார்நடை என ஒன்று தோன்றிப் பரவியுள்ளது. எனவே அடிகள் தனித்தமிழ் நடையின் தந்தை' எனற்பாலர்' என்று பாராட்டித்"தனித்தமிழ்த்தந்தை” என்றுநாடு வழங்கவும் வழிவகுத்தார். .

இவர்தம் தனித்தமிழ் உரைநடை முந்தையோர் கைக்கொண்ட உரைநடையிலிருந்து வேறுபட்டது. தமிழ் உரை நடை, வடமொழி உரைநடை ஆங்கில உரைநடை இவற்றின் தனிப்போக்குகளை அவைகளைப் படிக்குங்கால்கண்டுணர்ந்துதமிழ் மரபிற்கேற்பத்தாம்தம் நடையை அமைத்துக் கொண்டார் எனலாம். o

தமிழிலும் வடமொழியிலும் ஆங்கிலத்திலும் அடிகளார் இளமை முதல் பயின்றநூல்கள் எண்ணிறந்தன. தேர்ந்தெடுத்தநூல்களையே பயின்றார். தொடக்க காலத்தில் புத்தகக்கடையிலும் பெரியோரிடத்தும் நூல்களைப் பெற்றும் பயின்றார். தான் காலூன்றிய வாழ்வுக் காலத்தில் தாம் ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை நூல்கள் வாங்குவதற்குச் செலவிட்டார். ஆழ்ந்து நுணுகிப் பயின்றார். இவர்தம் நூலறிவை நேரில் உணர்ந்த மனோன்மணியம் கந்தரனார், “இத்துணை இளம் வயதில் இவ்வளவு நூல்களை ஆழ்ந்து பயின்றுள்ளார் என்பது வியப்பிற்குரியது” என்று பாராட்டியுள்ளார். -

அவ்வாறு பயின்றவற்றின் ஆழங்களை உள்ளத்தில் முறையே அடுக்கி, அவ்வடுக்கிலிருந்து வேண்டுங்கால் எடுத்ததிறம் இவரதுநினைவாற்றலுக்குச் சான்று என்பர். .

அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், தமிழ்ப் புலவர்களின் வேலையாகப்பின்வருவதை எழுதினார்

"ஆவினிடத்தில் பாலிருக்கிறது என்றால் அதன் உடல் முழுதும் பாலைத் தேடிச் செல்வதில்லை. கறக்க வேண்டிய இடத்தில் முறைப்படி கறந்தால்தான் பால் கிடைக்கும். அதைப்போலத் தமிழ் இலக்கியங்கள், கோட்பாட்டு நூல்களிலிருந்தெல்லாம் கருத்துக்களை முறைப்படி கறந்து தரவேண்டியது தமிழ்ப்

புலவர்களின் வேலையாகும்”

- இது மறைமலையடிகளாரை மனத்தில் இருத்தி வரையப்பட்டதே. இதற்கேற்பவே அடிகளார் எழுத்துருவங்கள் அமைந்திருந்தன. எழுதத் தொடங்கிய நாள்முதலே இப்பாங்கிலேயே எழுதினார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/65&oldid=687125" இலிருந்து மீள்விக்கப்பட்டது