பக்கம்:தமிழ்மாலை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

முதன்முதலில் சிறு கட்டுரையாகச் சைவ சித்தாந்தம் பற்றி எழுதி நண்பர் உதவியுடன் வெளியிட்டார். தொடர்ந்து தாம் பேசிய பொழிவுகளை எழுத்துருவாக்கிநாகை நீலலோசனி இதழில்வெளிவரச்செய்தார்.சிவத்திரு சோமசுந்தரநாயகர்கருத்திற்குமாறுபட்டுமறுப்பெழுதிய கட்டுரை ஒன்றிற்கு மறுப்புக் கட்டுரை எழுதினார். நீலலோசனி’ இதழில் வந்தவற்றைத் தனித்தனியாகச் சிறிது கட்டுரைகளையே சிறு பதிப்பாகவும் வெளிவரச் செய்தார். தொடர்ந்து ஆய்வு நூல்கள் எழுதினார். இவ்வாறாக நூற்பணி பெருகியது.

முதலில் நாகை வேதாசலம் பிள்ளை' என்னும் பெயரிலும், பின்னர் ‘சுவாமி வேதாசலம் என்னும் பெயரிலும் எழுதினார். சித்தாந்த தீபிகை' என்னும்இதழுக்கு முருகவேள் என்னும்புனைபெயரிலும் எழுதினார்.பின்னர், 'பல்லாவரம் பொதுநிலைக்கழகக் குருவும் சித்தாந்த தீபிகை ஆசிரியருமான மறைத்திருவாளர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் என்றும், பின்னர் பல்லர்வரம் பொதுநிலைக்கழக ஆசிரியர்மறைத்திருசுவாமிவேதாசலம் என்றும் மறைமலையடிகள் என்றும் நூல் முகப்பில் பெயரிட்டு எழுதினார்.

நண்பர்கள் வழிப் பதிப்பாகவும், தம் பதிப்பாகவும் தென்னிந்தியச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்புக்களாகவும் இவர்தம் நூல்கள் வெளிவந்தன. பல்லாவரத்தில் தம் இல்லத்திலேயே அச்சகம். அமைத்துத் தம் நேர்பார்வையில் பதிப்பித்தார். 8 பக்கங்கள் அளவில் சிறு வெளியீடுகளாகவும், 25 முதல் 100 பக்கங்கள் வரை குறும் பதிப்புக்களாகவும், 200, 300 பக்க அளவில் நிறை பக்க நூல்களாகவும், இரண்டு தொகுதிகளாக 944 பக்கங்கள் வரை பெருநூல்களாகவும் வளர்ந்தன. -

பலநூல்கள் இரண்டாம் பதிப்பு முதல்5 பதிப்புகள் வரை வெளிவந்தன. அக்கால விற்பனைக் களம் தமிழுக்குப் பெருகியதில்லையாதலால் பல இரண்டாம் பதிப்புகள் 250 படிகள்,300 படிகள் என்னும் அளவில் வெளிவந்தன. யாழ்பல்கலைக்கழகத்தில் வேளாளர் நாகரிகமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிவுரைக்கொத்தும் கல்லூரிஇடைநிலைவகுப்பிற்குப் பாடநூல்களாயினமையால் சில ஆயிரம் படிகள் செலவாயின.இவை அடிகளார் நூலின் பதிப்பு வரலாறு. -

இவ்வாறு இவர் பெயரால் வெளிவந்த நூல்கள் 65. இவற்றுள் தமிழ் நூல்கள் 61.ஆங்கிலநூல்கள் 4.இவையன்றித்தமிழில் ஞானசாகரம் என்னும் 'அறிவுக்கடல் திங்கள் இதழையும், இரண்டு ஆங்கில அரைத் திங்கள் இதழ்களையும் வெளியிட்டார். • , -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/66&oldid=687134" இலிருந்து மீள்விக்கப்பட்டது