பக்கம்:தமிழ்மாலை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ()

தமிழ் நூல்களுக்கு ஆங்கிலத்தில் முன்னுரை எழுத்தும் முறையும் இருந்தது. சில ஆங்கில முன்னுரைகள் மிக நீண்டனவாகவும், ஒரு குறும்நூல் எனத்தகும் பாங்கிலும் அமைந்தன. சிந்தனைக் கட்டுரைகள் என்னும் நூல் 150 பக்கங்கள் கொண்டது. இதில் 42 பக்கங்கள் ஆங்கில முன்னுரை. х

மேலும் இரண்டு தமிழ் நூல்கள்,எழுத எண்ணியிருப்பதாகவும், ஒர் ஆங்கில நூல் எழுதப்போவதாகவும் சில முன்னுரைகளில் குறித்தார். இப்படி அவர் நூல்கள் பற்றி ஒரு கணக்கீடு தருவது அடிகளாரின் வாழ்வியலில் நூலாக்கம் நல்ல பங்குவகித்தது என்பதை வெளிப்படுத்தும். -

"மண்கண்ட வெண்குடைக் கீழாக மேம்பட்ட மன்னருமென் பண்கண்ட வளவிற் பணியச் செய்வாய்”

என்ற குமரகுருபரரின் தன்னம்பிக்கை வேண்டுகோள் போன்றும், “பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்"என்று தம் உண்மை ஆர்வத்தைப் பாடிய பாரதி போன்றும் அதற்கு மேலுமாகத் தம் நூல்கள் பற்றிப் பெருமையான எண்ணங்கொண்ட தன்னம்பிக்கையாளராக வாழ்ந்தார். . -

"பண்டைக்கால தமிழரும் ஆரியரும்” என்னும் தம் நூலில் ஆங்கில முன்னுரையில் “Even to the historiaris of the west, it is a new theme.” Tsing STGoiá Goh நூல் திறம் பற்றிய படைப்பு நம்பிக்கையைக்காட்டியுள்ளார்.தாம்படைத்தநூல்களின் பயன்பாட்டிைஅவரே மிடுக்குடன்,

“யான் தமிழில் எழுதும் ஒவ்வொரு சொல்லையும், சொற்றொடரையும் நீங்கள் செம்மையாக உன்னித்து வந்தால் தமிழிற் பிழையின்றிப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெறுவீர்கள்"

என்று எழுதியமை நூற்றுக்கு நூறு உண்மையாயிற்று

மேலே குறித்த அடிகளார் தம் 64 நூல்களையும் நூலுருவாக்கநிலையில்

வைத்துப்பார்த்தால்,

சொற்பொழிவு நூலுரு

கட்டுரை -தொகுப்புநூலுரு

நூலாக்கநூலுரு மொழிபெயர்ப்புநூலுரு

.

κ

  • Í Hope to do if in my separte English work Tanulia India".
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/67&oldid=687135" இலிருந்து மீள்விக்கப்பட்டது