பக்கம்:தமிழ்மாலை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

சிவஞான போதத்திற்கு உரைவிளக்கம் எழுதிய சிவப்பிரகாச நூலாசிரியர் கொற்றவன்குடி உமாபதிதேவ நாயனார் என்பார் தம் நூலுக்கு அவையடக்கம்ாக ஒரு பாடல் எழுதினார். அவர் எழுதியது அவையடக்கத்திற்குத்தான். ஆனால் அப்பாடல் பொதுவாக அனைத்து நூல்களுக்கும் திறனாய்வு இலக்கணம் போல் அமைந்துள்ளது.

'தொன்மை நூல்கள் என்பதால் எல்லாம் நல்ல நூல்கள் ஆகா. புதிய படைப்பு என்பதால் தீயனவாகா என்னும் முன்னுரையுடன் தொடங்கும் அவர் திறனாய்வோரை மூன்று வகையினராகக் கண்டுள்ளார். ஒருவர் துணிந்த தன்மையினார்.அடுத்தவர் நடுவாம் தன்மையினார் மூன்றாமவர் தமக்கென ஒன்றிலர். - -

'முதன்மையான துணிந்த தன்மையினார் நூற்பொருளில் சிறு குறையிருப்பினும் மாணிக்கமணியிலும் களங்கம் இருப்பதை எண்ணிக் குறையைச் சொல்லாது விடுவர். நடுவாம்தன்மையினார் நூற்பொருளில் உள்ள பழமைச் சிறப்புகளை ஆராய்ந்து ஏற்பர் தம.கென ஒன்றில்லாதவர் பலர் புகழ்ந்தால் தாமும் புகழ்வர்; அந்நூலை வேண்டாதவர் இகழ்ந்தால் தாமும் இகழ்வர் என்றார். பாடல் இது:

"தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா; இன்று

தோன்றியநூல் எனும்எவையும் தீதாகா, துணிந்த நன்மையினார் நலங்கொள்மணி பொதியுமதன் களங்கம்

நவையாகா தெனஉண்மை நயந்திடுவர்; நடுவாந் தன்மையினார் பழமைஅழ காராய்ந்து தரிப்பர்;

தவறுநலம் பொருளின்கண் சார்வாய்ந் தறிதல் இன்மையினார் பலர்புகழில் ஏத்துவர் ஏதிலவர்

இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர்; தமக்கெனஒன்றிலரே” அடிகளார்நூல்களைச் சுருக்கமாகத்திறனாய்வு செய்யப்படும் நான் தமக்கென ஒன்றிலர் இனத்தவனல்லேன். எனக்கென ஒன்று உள்ளவன். அது பகுத்தறிவுப் பார்வை. அதற்கென்று தட்டுக்கோடு பாயும் பகுத்தறிவில்லை. “ஒத்ததறிபவன்', 'நடுவாம் தன்மையினார் போல பழமை அழகை மட்டும் ஆராய்ந்து தரிப்பவனும் அல்லன். துணிந்த தன்மையினார் போன்று அடிகளார் இறைக்கொள்கையில் கொண்ட வழிபாட்டுக் கருத்துக்களைச் சாராமல் அடிகளார் தம் எழுத்துத் திறத்தைத் திறனாய்வு செய்யவே புகுகின்றேன்.

ஈ. திறனாய்வு

11. வாழ்வியல் (2 நூல்கள்)

கோட்பாட்டியல் முதலாக வரைவியல் ஈறாக வரிசைப்படுத்திப் பட்டியலிட்டமை, அடிகளார் காலவளர்ச்சியில் வளர்ந்த நூலாக்கப் படிக்கட்டின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/69&oldid=687137" இலிருந்து மீள்விக்கப்பட்டது