பக்கம்:தமிழ்மாலை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இந்நூலில் அதிக அளவில் மேலை அறிஞர்களின் ஆய்வுக் கருத்துக்களை எடுத்துக் காட்டியுள்ளார். தமிழ் வடமொழிக் கருத்துக்கள் செறிந்துள்ளன. மேலையறிஞர்களின் உடலியல்,மருந்தியல், உயிரியல்,பாலியல் கருத்துக்கள் மிகப் பொருத்தமானவை. ஏற்கக்கூடியவை. இந்நூலில் உரிய இடத்தில்இடம்பெற்றுள்ளன.இவ்வடைப்பையெல்லாம்வைத்து நோக்கும்போது அடிகளார் ஒருநூலை ஆக்கத் தொடங்குமுன் கருத்துக்களைக்குறிப்பெடுத்து வரிசைப்படுத்திக் கொண்டு எழுதியுள்ளார் என்று உணர முடிகிறது. சில வரிகளை எழுதப் பல நூல்களைப் பார்த்துள்ளார் என்று கொள்ளுமாறு பல வரிகள் பேசுகின்றன.

நிலமிசை நீடுவாழ்வார்

மிக மிக இயல்பாகவும், ஆற்றொழுக்கான கருத்தோட்டத்துடனும், கடைப்பிடிப்போரின் நிலையுணர்ந்தும், நூற்கருத்து நடைமுறைப்பட்டுப் பயன்விளக்க வேண்டும் என்னும் ஆழ்ந்த நோக்குடனும் இந்நூல் செல்கின்றது.

இயற்கை அமைப்பில் தொடங்கி இயற்கையின் மூலமான ஞாயிற்றை விளக்கி அது பயன்தருவதையும், மக்கள் அதனை எவ்வாறு பயன் கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவுபட விளக்கும் தொடக்கமே நூலின் பயனைக் காட்டுகிறது.ஞாயிற்றின் ஒளியை எடுத்துக் கூறத் தொடங்கி ஒளியின் தன்மை, பயன், பயன்படுத்தும் முறை இவற்றை விரிப்பவர், அதன் ஒளி ஏழு நிறங்கொண்டதென்று காட்டி அவ்வேழு நிறமும் சிவப்பு நீலம் என்னும் இரண்டுள் அடக்கம் என்று காட்டி அதனைத் தம் சைவ சமய நோக்கிற்குப் பயன்படுத்தியிருப்பது அவர்தம் தனி ஆர்வத்தையும் காட்டுகிறது. சிவப்பு நிறந்தான் சிவனின் வெளிப்பாட்டுநிறம் என்றும்,நீலந்தான் உமையம்மையின் வெளிப்பாட்டு நிறம் என்றும் காட்டி, எனவே, ஞாயிறு அம்மையப்பரின் வெளிப்பாடு என்று காட்டியது மிகு திறன் மட்டுமன்று இவர்தம் சைவப்படிவின் வெளிப்பாடுமாகும்.

தொடர்ந்துநீர்,நிலம், உழவு, உணவு, உறக்கம், பொருந்தும் உணவு என முறையாக விளக்கி முதல் பகுதியை நிறைவேற்றுகிறார். உழைத்து, உண்டு, உறங்க வழிகாட்டியவர், ஆண்பெண் கூட்டுறவு வாழ்க்கைக்கு வெளிச்ச மூட்டுகிறார். ஆண்பெண் சேர்க்கையில் புகுத்தி, இன்பமும் கருவும் சொல்லி மக்கட்பேற்றைக் காணச் செய்து தாய் சேய் நிலைகூறி, குழந்தை வளர்ப்பைச் சொல்லி, கருவிலக்கிற்கு இயற்கை நெறி சொல்லி நோய் இல்லா நீண்ட வாழ்வாக நிறைவேற்றியுள்ளார்.

இவ்விளக்கங்களில் பாலியல் கருத்துக்களை அறிவியல் பாங்குடன் பிட்டும் காட்டுகிறார். ஆண்பெண் உறுப்புகளின் அமைப்பு, இயல்பு, உணர்வேற்றம், எல்லாம் ஆழ்ந்து பார்க்குமாறு காட்டி, ஆங்கில அறிவியல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/71&oldid=687139" இலிருந்து மீள்விக்கப்பட்டது