பக்கம்:தமிழ்மாலை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இதனால் அவர்கொண்டவடமறைஈடுபாட்டை"வேதபாக்கியத்தன்மை உண்டாகாது” என்று குறித்ததால் உணரலாம். ஆனால், காலப்போக்கில் இக்கருத்தில் மாற்றங் கொண்டார். முடிவாக அவர் "வேதம் சாமானிய நூல்: சிவாகமம் விசேடநூல்" என்று குறித்தார்.

இவ்வாறு சைவ சித்தாந்தமேயாவற்றிற்கும் சிறந்த கோட்பாட்டுச்சமயம் என்று அவரின் கோட்பாட்டுநூல்களால் நிறுவியுள்ளார்.

"ஞானசேகர வெண்பா என்றொரு நூலை அடிகளார் வெளியிட்டுள்ளார்.1898-இல் வெளிவந்த 14பக்கநூல் இது.இதுபற்றிய விவரம் தெரியவில்லை, இஃதும் கோட்பாடு கொண்டதே.

அடுத்து அவரின் எழுத்தோட்டம் செய்யுள்களுக்கு உரையெழுதுவதிலேயே தொடர்ந்தது. இவ்வாறு தொடர்ந்து வெவ்வேறு கருத்தோட்டத்தில் வளர்ந்ததைக் குறிக்கும் போதே ஒன்றை எழுதத் தொடங்கி முன் கொண்டதை விடுத்தார் என்று கொள்ளக் கூடாது. இடையிடையே முன்தொடங்கிய கருத்துக்களையும் எழுதினார். எனவே அவரின் 18 இயல் கருத்து எழுத்துக்களும் விரவி வந்தன.

2. உரையியல் (6 நூல்கள்)

செய்யுள் நூல்களைப் பயிலும்போதே அவர்க்குரிய ஜயங்களை நாகை இயற்றமிழாசிரியர் வே. நாராயணசாமி பிள்ளையவர்கள் போக்கினார்கள். அத்துடன் தமக்குத் தோன்றிய உரைகளைக் குறித்துக் கொண்டார்.இக்குறிப்பு கொள்ளும் முறையால் 'சதமணிக்கோவை’ என்னும் நூலுக்குக் குறிப்புரை எழுதி வெளியிடவேண்டும் என்னும் ஆர்வத்தால் முதன்முதலில் அந்நூலுக்குக் குறிப்புரை எழுதி வெளியிட்டார். இதுதான் அடிகளாரது முதல் உரைநூல். குறிப்புரை என்னும் உரை தந்த்பாங்கு புதுமையானது.அதற்கும் மேற்கோள்கள், சான்றுகள் ஆங்காங்கு காட்டப்பெற்றமை சிறப்பு:ஆசிரியர் சோமசுந்தரநாயகர் அடிகளாரது புலமைத்திறமறிந்து சீர்காழிச்சிற்றம்பலநாடிகள் எழுதிய துகளறு போதம்'என்னும் அரியசைவசித்தாந்தநூலுக்கு உரை எழுதுமாறுபணித்தார். முறையான உரையாக அவ்வுரை அமைந்தது. உரை என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டான உரை எனலாம். இது சிவஞான முனிவர் உரையோடு ஒப்பது" என்று ஆசிரியர் நாயகரவர்களே பாராட்டினார்கள். தொடர்ந்து பஞ்சாக்கரமாலை'க்கு எழுதினார்.

உரைகளில் புதுமையாக ஆராய்ச்சி உரை என்று பத்துப்பாட்டில் 'முல்லைப் பாட்டு, பட்டினப்பாலை, இரண்டிற்கும் எழுதியமை சிறப்பாகக் குறிக்கத்தக்கது. இளமைப் பருவமாகிய அகவை 22-இல் சென்னைக் கிறித்துங்க் கல்லூரிப் பேராசிரியாானமை அடிகளார் வாழ்வில் ஒரு சிறப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/75&oldid=687143" இலிருந்து மீள்விக்கப்பட்டது