பக்கம்:தமிழ்மாலை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

என்று கரிகாலன் செங்கோல் நலத்தைக் கூறியது புறப்பொருள். இவ்வாறெல்லாம் எடுத்துக்காட்டுபவர் மற்றொரு புதுமையும் படைத்துள்ளார். புறப்பொருளில் தலைவன் பெயர் குறிப்பிடப்பெறும். அகப்பொருளில் தலைவன் தலைவி பெயர்கள் கூறப்பெறுவதில்லை. அடிகளார் உருத்திரங்கண்ணனாரது பட்டினப்பாலையில்கலையூற்றாய் ஊறும் உணர்வுகளைக் காண்கிறார்.அவற்றை வெளிப்படுத்தும் உருத்திரங்கண்ண்னார் ஈடுபாட்டை உணர்கிறார். இரண்டையும் இழையோடச் செய்து உருத்திரங்கண்ணனார்ே அகப்பொருள் தலைவனாக அமைந்துதம் காதல் உணர்வை வெளிப்படுத்துவது போன்று பட்டினப்பாலையில் பேசும் அகப்பொருள் தல்ைவன் உருத்திரங்கண்ணனாரென்று படைத்து மொழிந்து காட்டியுள்ள திறம் நயக்கத்தக்கது. அகப்பொருள்புதுமை ஒன்றைப்படைத்து மொழிந்து காட்டியுள்ள திறம், நயக்கத்தக்கது. அகப்பொருள் புதுமை ஒன்றைப் படைத்தது வியக்கத்தக்கது. * -

உரைவளத்தைக் காண ஒர் எடுத்துக்காட்டு கூறல் சாலும்.வானத்தில் பாடிப் பறக்கும் ஒன்று வானம்பாடி எனப்படும். அது பாடி மழைநீர்த்துளியைப் பருகும் என்பர். இதனை உருத்திரங்கண்ணனார். "தற்பாடிய தளியுணவின்புள்” என்கிறார்.பறவை வானத்தில் பாடிப்பறப்பதால்வானம்பாடி அன்று. வானத்தைப்பாடிப் பறக்குமாம்.பாடிய புலவன் பரிசில் பெறுவதுபோன்று வானம் நீர்த்துளியை வ்ழங்குமாம். சிலநேரம் பாட்டைக் கேட்டுப் பரிசில் வழங்காத மன்னரும் தென்படுவர். அதுபோன்றே தன்னைப்பாடிய வானம்பாடிக்கு வர்ணம் அதன் உணவாகிய நீர்த்துளியைத் தராத அளவிற்கு அதாவது ஒரு துளிநீரையும் பெய்யாது வானம் வறண்டு போனாலும் காவிரி வளம் சுரக்கும் என்று பாடியுள்ளார். இதனைச் சொற்பொருளில் விளக்கிய நச்சினார்க்கினியர் தளி உணவு என்பதற்குத் துளி உணவு என்றே எழுதினார். ஆனால் தளி என்பதற்குத் துளி என்னும் பொருள் எவ்வாறு வந்தது என்று காட்டவில்லை. அடிகளார்.இத்தளி என்பது கருங்கார் முதலில் தள்ளும் முதல்நீர்க்குப்பெயர் என்பதை 'தளி,தலைப்பெய் மழைத்துளி என்பர் பிங்கலந்தையார்” என்று காட்டி முதல் மழைத்துளியும் கிடைக்காத காலம் என்பதைக் குறிப்பாகக் காட்டினார். முதலில் கருங்காரால் தள்ளப்பட்டு வெளிவருவது தளி.அடுத்துத்துள்ளிவருவது துளி என்னும் குறிப்புப்பொருள் போலும். - - -

அடிகளார்தம் உரைப்படைப்பு வரலாற்றில் பல்லாண்டுஇடைவெளிக்குப் பின்னர் 6ುಕಕ விரிவுரை தொடங்கியது. அவர்தம் மருகராகவிருந்த திருவரங்கனார் சென்னையில் செந்தமிழ்க் களஞ்சியம்' என்னும் திங்களிதழை நடத்தினார். அவர் வேண்டுகோளின் உந்துலால் தாம் வழிபடுகடவுள்போல் போற்றிவந்தமாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கு உரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/77&oldid=687145" இலிருந்து மீள்விக்கப்பட்டது